பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

செளந்தர கோகிலம்



இருந்தான்; அவன் என்னைப் பார்த்துத் தன்னுடைய எஜமான ரான கந்தசாமி முதலியார் இரண்டாவது கட்டில் இருக்கிறார் என்றும், அங்கேயே நேரில் போய் மணியார்டரைக் கொடுக்க லாம் என்றும், தான் வேறொரு மனிதர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பதால், தான் இரண்டாவது கட்டுக்குப் போய்க் கந்தசாமி முதலியாரை அழைத்து வர முடியாது என்றும் சொன்னான். இவ்வளவு பெரிய வீட்டில் வேலையாளோடு இருக்கிறவர் பெரிய மனிதராக இருப்பார் என்றும், ஆகையால் அவரை வெளியில் கூப்பிடக்கூடாது என்றும் நினைத்து நானே உள்ளே வந்தேன். முதலாவதாக கட்டில் யாரும் காணப்பட வில்லை. அதைத் தாண்டி இரண்டாவது கட்டுக்குள் நான் நுழைந்து தாழ்வாரத்தில் திரும்பினேன். திடீரென்று எனக்குப் பின்பக்கமாக வந்த நாலைந்து முரட்டாள்களில் ஒருவன் என்னுடைய குரவளையை இறுகப் பிடித்து நான் வாயைத் திறந்து கூச்சலிடாமல் அழுத்திக் கொண்டான். இன்னொருவன் என்னுடைய வாய்க்குள் ஒரு துணிப்பந்தைக் கெட்டியாகச் சொருகிவிட்டான்; மற்ற இரண்டுபேர்களும் என்னைப் பிடித்துக் கயிற்றால் கட்டி விட்டார்கள். அப்புறம் இப்புறம் அசையவும் பேசவும் என்னால் கூடாமல் போய்விட்டது. உடனே அவர்கள் என்னிடத்திலிருந்த பணத்தையும் கடிதங்களையும் பிடுங்கி, வெறுங் கடிதங்களையும் மணியார்டர் நமூனாக்களையும் கீழே போட்டுவிட்டு மற்றவைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, கதவைமூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு போய்விட்டார் கள். நான் எழுந்திருக்க முயன்று பார்த்தேன். என் கால்கள் இரண்டையும் பிரிக்க முடியாமல் சேர்த்துக் கட்டியிருந்தார்கள் ஆகையால், எழுந்திருக்க முடியவில்லை. என்னுடைய தொண்டை கிழிந்து விடும்போல ஆகிவிட்டது. மூச்சுத் திணறிப் போய்விட்டது. அதற்குப் பிறகு என்ன நடந்ததோ தெரிய வில்லை; இப்போதுதான் புத்தி சரிப்பட்டது” என்றான். அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த நான்கு ஆட்களின் அடையாளங்களையும், இன்னும் தேவையான மற்ற விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். தபாற் சேவகனால் கொடுக்கப்பட்ட ஐந்து மணியார்டர்களின் தொகை போக மிகுதியிருந்த இருபத்து மூவாயிரத்தைந்நூற்று நாற்பத்திரண்டு