பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 13

ரூபாயும், பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷியூர் சாமான் களும், 24 ரிஜிஸ்டர் காகிதங்களும் காணாமற் போனதாகக் கணக்கு எடுக்கப்பட்டது. கந்தசாமி முதலியார் என்பவருக்கு 10 ரூபாய்க்கு வந்த மணியார்டர் நமூனாவைத் தேடியெடுத்து அதை யார் அனுப்பியது என்பதைப் பார்க்க, அது மைலாப்பூர் நடுத்தெருவில் 250-ம் இலக்கமுள்ள வீட்டில் இருக்கும் வீராசாமி முதலியார் என்பவரால் அனுப்பப்பட்டதாகத் தெரிந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டிலிருந்த டெலி போனுக்குப் போய் அதன் மூலமாக மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்பி, நடுத்தெருவில் 250-ம் இலக்கமுள்ள வீட்டிலிருக்கும் வீராசாமி முதலியாரை உடனே பிடித்துக் கைதி செய்யும்படி சொல்லிவிட்டு வந்து நம்பெருமாள் செட்டியாரையும், தபாற்காரனையும், அவனிடத்திலிருந்த கடிதங்கள் முதலிய தஸ்தாவேஜுகளோடு அழைத்துக்கொண்டு, மற்றவர்கள் தொடர்ந்துவர, அதற்கருகில் இருந்த ஸ்டேஷ னுக்குப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர், உடனே டெலி போனுக்குப் போய், அந்தத் திருட்டைப் பற்றிய விவரங்க ளையும் திருடர்களின் அங்க அடையாளங்களையும் மற்ற எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவித்து, சென்னை யிலுள்ள எல்லா ஜெவான்களும் இந்த விஷயத்தில் விழிப் பாகவும் எச்சரிப்பாகவும் இருந்து இந்தத் திருட்டைக் கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியபோது, மைலாப்பூரிலிருந்து மறுமொழி கிடைத்தது. நடுத்தெருவில் சுமார் 30 வீடுகளே இருப்பதால், 250-வது இலக்கமுள்ள வீடே அந்தத் தெருவில் இல்லையென்றும், வீராசாமி முதலியார் என்ற பெயருடைய மனிதன் அந்தத் தெருவில் எந்த வீட்டிலும் இல்லையென்றும் மைலாப்பூர் சப் இன்ஸ்பெக்டர் சொல்லக் கேட்ட, இன்ஸ்பெக்டர் மிகுந்த திகைப்பும் வியப்பும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாமல் தவித்துக் கொண்டி ருக்கிறார். மகா தந்திரமாகவும் திறமையாகவும் நடத்தப் பட்டுள்ள விநோதமான இந்தத் திருட்டை அவர் எப்படித்தான் கண்டுபிடிப்பாரோ இதை யார்தான் செய்திருப்பார்களோ தெரியவில்லை' என்றார்.

அதைக்கேட்ட செட்டியார் மிகுந்த கவலையும் கலக்கமும் வியப்பும் அடைந்து, "அப்படியா சங்கதி! இது மகா வேடிக்கை