பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - வது அதிகாரம் கடற்கரை விபத்து

ன்றைய தினம் காலை ஐந்தரைமணி நேரமாயிற்று. சென்னையின் கடற்கரைமீது திருவல்லிக்கேணிக்கு

§." !.ề அருகிலுள்ள சர்க்கார் கச்சேரிகளில் ஒன்றிலிருந்து ఫీ ஒரு யெளனவப் புருஷனும் அவனது நண்பர்களான வேறு நாலைந்து குமாஸ்தாக்களும் வெளிப்பட்டனர். வெளிப்பட்டவர்கள் வேடிக்கையாகப் பேசி நகைத்துக் கொண்டு சிறிது தூரம் வரையில் ராஜபாட்டையில் வந்தவர்கள் பிரிந்து தத்தம் இருப்பிடத்தை நோக்கிச் செல்லலாயினர். அவர்களுள் சிலர் திருவல்லிக்கேணியை நோக்கியும், சிலர் சிந்தாதிரிப் பேட்டையை நோக்கியும், சிலர் கடலிற்கருகிலுள்ள மணல் பரப்பை நோக்கியும் செல்ல, முன் குறிக்கப்பட்ட அந்த யெளவனப் புருஷன் மாத்திரம் கடற்கரையின் ஒரமாக இருந்த ராஜபாட்டையின் வழியாக வடக்குத் திக்கில் சென்று கொண்டிருந்தான்.

அவனது வயது இருபது, அல்லது. இருபத்திரண்டிற்கு மேல் இராதானாலும், அவனது தோற்றத்தில் ஆண்மையும், கம்பீரமும், புத்திசாலித்தனமும் நன்றாகப் புலப்பட்டன. அவன் சிவந்த மன்மதாகாரமான வடிவமும், ஆண்பெண்பாலார் ஆகிய இருவகுப்பாரையும் ஒரு புன்சிரிப்பால் கவரத்தக்க வசீகரமான முகமும் பெற்றவனாக இருந்தான். கருத்து அடர்ந்து முழங்கால் வரையில் நீண்டு பளபளப்பாக மின்னிய அவனது சிரத்தின் கூந்தலை ஒரு தேங்காயளவு முடிந்து விட்டிருந்ததான பின்னழகும், அவனது முகத்தில் மற்ற அவயங்களைக் காட்டிலும் எடுப்பாகவும் விசாலமாகவும் தோன்றிய அற்புதமான கண்களின் அழகும், செவிகளிலிருந்த வைரக் கடுக்கன்களின் அழகும், அப்போதே முளைக்க ஆரம்பித்த மீசையின் அழகும் ஒன்றுகூடி அவன் நிரம்பவும் சொகுசாகவும் செல்வமாகவும் வளர்க்கப் பட்டவன் என்ற ஓர் எண்ணத்தையும், அவனிடத்தில் ஒருவகை யான பிரேமையும் உண்டாக்கின. அவன் மற்றவர்கள் போல