பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

செளந்தர கோகிலம்



ஆகா! அந்த வண்டியில் தங்கப்பதுமைகள் போன்ற இரண்டு யெளவன மங்கையர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு ஜோடி மாடப் புறாக்கள் போலவும், ஒரே வயது, ஒரே உயரம், ஒரே பருமன், ஒரே நிறம், ஒரே முக அமைப்பு, ஒரே அழகு முதலியவற்றோடு கூடிய இரட்டைக் குழந்தைகள் போலவும் காணப்பட்டனர். அவ்விருவரது வயதும் பதினைந்து அல்லது பதினாறுக்கு மேல் இராது என்பது நிச்சயமாகத் தெரியவந்தது. கண்கொள்ளாத மகா அற்புதமான எழிலை ஏந்திய கந்தருவலோகத்து ராஜகுமாரிகள் போல, இரண்டு அற்புத ஜோதிகளாக, உட்கார்ந்திருந்த அந்த அதிரூப அணங்கு கள் இருவரும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து அப்போதே இதழ்விரித்து நகைத்த இரண்டு தாமரை மலர்கள் போல அதி யெளவனமும், உத்தம ஜாதி அமைப்பும் ஒப்பு யர்வற்ற கட்டழகும், தேவாமிருதம் போலக் குளிர்ந்த வதனமும் பெற்றவர்களாய் இரண்டு சுவர்க்கலோகங்கள் ஜதையாக எழுந்து பவனி வருவதுபோலக் காணப்பட்டனர். அவ்வாறு விலை மதிப்பற்ற விண்மணிகள் போலப் பொலிந்த அப் பெண்மணிகள் இருவரும் அடுத்தடுத்து இருந்தது ஒருத்தியின் வடிவமே நிலைக்கண்ணாடிக்குள் மற்றொன்றாகத் தெரிவதுபோல இருந்ததன்றி, நெடுங்காலம் அவர்களோடு இருந்து பழகு வோரன்றி மற்றவர் அவர்களது வேறுபாட்டை அறிந்து கொள்வது கூடாத காரியமாகவும் இருந்தது; ஆனால், அன்றைய மாலையில் அவர்களுள் ஒருத்தி மேகவருணப் பட்டாடை யையும் மற்றவள் ஊதாநிறப் பட்டாடையையும் அணிந்திருந் ததனால் மாத்திரமே அவர்களிருவரும் வெவ்வேறு ஸ்திரீகள் என்பது புலப்பட்டது. அவ்வாறு ரதிதேவிகள் போலத் தோன்றிய அவ்விரு பேடன்னங்களையும் காண்போர் அனைவரும் திகைத்து மயங்கிப் பிரமித்து தம்மையும், உலகையும் மறந்து ஸ்தம்பித்து அப்படியப்படியே நின்று, வைத்த கண்ணை வைத்த இடத்திலேயிருந்து எடுக்க மனமற்றவராய்த் தவித்து நின்றன ரென்பதை அறியாமல் அந்தப் பூங்கோதையர் கபடமற்ற சுத்த ஸ்வரூபிணிகளாகச் சென்றனர். அப்படிப்பட்ட மனமோகன சுந்தராங்கிகளான அவர்கள் இருவரும் ஸாரட்டில் ஏறும்போது, அவர்களுக்கு முன்னால் குறட்டின்மேல் சென்று கொண்டிருந்த நமது வடிவழகனது அடையாளத்தை அவர்கள் கண்டு