பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

செளந்தர கோகிலம்



இழுத்துக்கொண்டு தாறுமாறாக ஒடத்தொடங்கியது. 'æಡ್ಲಿಲ್ಲ! ஐயோ!" என்று கூக்குரலிடத் தலைப்பட்டனர் வண்டி கவிழ்ந்த போது கீழே தள்ளி விடப்பட்ட சாரதியின் கால் சுளுக்கிக் கொண்டமையால், அவன் ராஜபாட்டையிலிருந்து எழுந்திருக்க மாட்டாமல் தவித்துக் கூக்குரலிடுகிறான். ஸாரட்டில் உட்கார்ந் திருந்த மெல்லியலார் இருவரும் கதிகலங்கி, அன்றோடு தாம் இறந்தோம் என நினைத்தவர்களாய்ப் பெரிதும் கூக்குரலிட் டார்கள் ஆனாலும், அவர்களது தலைக்கு மேல் பாம்பின் படம்போல வளைந்து வந்திருந்த கூண்டின் இடது பக்கத்தில் ஒருவர் மேல் ஒருவராக விழுந்து மொத்துண்டு அதில் காணப் பட்ட கைப்பிடிகளை இறுகப் பிடித்தவண்ணம் இழுபட்டுக் கொண்டே போகிறார்கள். அந்த ராஜபாட்டையில் நெடுந் தூரத்திற்கு அப்பாலேதான் இரண்டொரு மனிதர்கள் வந்தனர் ஆகையால், அவர்கள் தூரத்திலிருந்தபடி கூக்குரலிட்டார்களே அன்றி, உடனே ஓடிவந்து அந்த விபத்தை விலக்கக் கூடாமல் இருந்தது. குதிரை தனது வெறியில் வண்டியைத் தாறுமாறாக இழுத்துக் கொண்டே ஒடிக் கடைசியில் பெருத்த பள்ளமாக இருந்த பக்கத்தின் ஒரமாக வண்டியைக் கொண்டு போய் விட்டது. வண்டியின் சக்கரம் ஓர் அடி கிழக்குப் பக்கத்தில் விலகியிருந்தால், ஒரு பனை மர ஆழமிருந்த பள்ளத்தில், குதிரையும் வண்டியும் வீழ்ந்து விடுவதன்றி, வண்டிக்குள் தொற்றிக்கொண்டிருந்த ஸ்திரீ ரத்னங்கள் இருவரும் மண்ணிற்குள் மறைந்து போயிருப்பர். அப்படிப்பட்ட மகா பயங்கரமான அபாய நிலைமையில் வண்டி இருந்ததை நமது யெளவனப் புருஷன் கண்டுவிட்டான். உடனே அவன் வீராவேசமும் பதைபதைப்பும் அடைந்தவனாய்த் தனது உயிரைத் திரணமாக மதித்து, மிகவும் விரைவாக ஒடி, ஒரு பக்கமாகக் கவிழ்ந்தபடியே சென்று கொண்டிருந்த ஸ்ாரட்டின் பின்புறத்தில் ஏறி முன்னாகப் பாய்ந்து, குதிரையின் கடிவாள வாரைப் பிடித்து, இதமான குரலால் குதிரையைச் சாந்தப் படுத்திய வண்ணம் மேற்குப் பக்கமாகப் பாதையில் அதைத் திருப்பி நாலைந்து கஜதாரம் நடத்தி நிறுத்த குதிரை அப்போது அடங்காமல் மேலும் இழுக்க, அவன் தனது முழு வலுவையும் செலுத்தி, அதை நிறுத்தியவுடனே விரைவாகக் கீழே குதித்து முன்னாகச் சென்று கடிவாள வாரைத் தனது பல்லால்