பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 25

கூறினான். அவன் சோல்ஜர்கள் விஷயமாகச் சொன்ன சங்கதி நிஜமானதாகையால், அதற்கு அந்த மங்கையர் எவ்விதமான ஆட்சேபணையும் சொல்லக்கூடவில்லை; ஆனால் தமக்காக வண்டிகொண்டு வரும்பொருட்டு திருவல்லிக்கேணி வரையில் போவதான சிரமத்தை அவருக்குக் கொடுக்க வேண்டியிருக் கிறதே என்ற நினைவினால் கோகிலாம்பாள் என்ன மறுமொழி சொல்வது என்பதைப் பற்றிச் சிந்தித்து நின்ற சமயத்தில் செளந்தரவல்லி, "என்ன, கோகிலா யோசனை செய்கிறாய்? அவர்கள் சொல்லுகிறமாதிரிதான் செய்ய வேண்டும். வேறே வழியில்லை. நம்முடைய மினியனுக்கும் கால் சரியாக இல்லை. என்ன செய்கிறது. இப்படிப்பட்ட பரோபகார குணமுடைய மனிதர்களின் உதவியைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று குயில் போல மொழிந்தாள். அந்தக் கிள்ளை மொழியாள் பேசி வாய்மூடுமுன் நமது யெளவனப் புருஷன், 'நான் போய் இதோ வந்து விட்டேன். இங்கேயே இருங்கள்” என்று சொல்லிக் கொண்டே திருவல்லிக்கேணியிருந்த திக்கில் ஒட்டமாக ஒடிவிட்டான். -

உடனே வண்டிக்கார மினியன் தட்டித்தடுமாறி உந்தி உந்தி நடந்து வண்டியின் லாந்தருக்குள்ளேயிருந்த காயை வெளியில் இழுத்துத் தனது தலையில் கட்டப்பட்டிருந்த வஸ்திரத்தை எடுத்துத் துண்டு துண்டாகக் கிழித்து அவற்றை எடுத்துக் கொண்டுபோய், குதிரையைச் சாந்தப்படுத்தி தட்டிக் கொடுத்து, அதன் காலிலிருந்து வழிந்த உதிரப் பெருக்கைத் துடைத்து எண்ணெய்த் துணியால் கட்டுகள் போட்டுக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கே வந்து கூடிய வழிப்போக்கர்களான ஜனங்கள் பெரிய மனிதரது வீட்டுப் பெண்கள் இருவர் மிகுந்த கிலேசத்தோடு தவித்து நின்றதையும், வண்டியும் குதிரையும் இருந்த அலங்கோலத்தையும் கண்டு மிகுந்த இரக்கமும் துயரமும் அடைந்து, ஒரு மோட்டார் வண்டியினால் அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்ததென்பதை வண்டிக் காரனிடத்தில் கேட் டறிந்து, மிகுந்த பதைப்பும் கோபமும் கொண்டவர்களாய், “எந்த மூளையில்லாக் கழுதை இப்படிப்பட்ட காரியம் செய்தவன்! இவ்வளவு பெரிய ரஸ்தாவில் இப்படி ஸ்ாரட்டின் மேல் ஒட்ட அந்த எருமை மாட்டுக்குக் கண் அவிந்தா போய் விட்டது: இந்த வெள்ளைக்காரர் நாசமாய்ப்போக அவர்கள்