பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 31

குதிரையையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்றான். அதைக்கேட்ட செளந்தரவல்லி, 'ஆம் கோகிலா அதுதான் நல்ல யோசனை. மினியனும் நம்மோடு வரட்டும்" என்று மெதுவாகக் கூற, அதைக்கேட்ட கோகிலாம்பாள் மினியனை நோக்கி, அது சரியல்ல; நீ இங்கேயே இரு; இந்த ஐயாவை திருவல்லிக் கேணிக்கு அனுப்பியதுமல்லாமல் இங்கே இருந்து நமக்காகக் காவல் காத்திருக்கச் செய்வது கொஞ்சமும் நியாயமான காரியமல்ல. திருவல்லிக்கேணிக்குப் போய்விட்டு வந்தது அவர்களுக்கு அலுப்பாகவும் இருக்கும்; அவர்கள் இங்கே இருந்து நடந்து நம்முடைய ஜாகைக்குப் பக்கத்திலுள்ள அவர்களுடைய ஜாகைக்கு வருவது கஷ்டமாக இருக்கும் ஆகையால், அவர்கள் இந்த வண்டியில் உட்கார்ந்து கொள்ளட்டும். எங்களுக்கும் துணை ஏற்படுவதோடு, அவர்கள் பட்ட சிரமத்துக்கும் ஒரு பரிகாரமாக இருக்கும். இப்படி முன்னால் வண்டிக்காரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்றாள்.

அதைக்கேட்ட அந்த யெளவனப் புருஷன் அந்த வார்த்தையை மறுத்துப் பேசமாட்டாதவனாய் நாணித் தயங்கிய வண்ணம் நடந்து முன்புறத்தில் ஏறி வண்டிக்காரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். உடனே வண்டி புறப்பட்டு ஒடத் தொடங்கியது. உட்புறத்தில் ஜெகஜ்ஜோதியாக உட்கார்ந் திருந்த சுந்தர ரூபிணிகளில் கோகிலாம்பாள் குனிந்த தலையை நிமிர்க்காமலே இருக்க, செளந்தரவல்லி அடிக்கடி பின்புறத்தில் பார்த்துக்கொண்டே சென்றாள்.

ஸ்ாரட்டு வீழ்ந்து கிடந்த இடத்திலிருந்த ஜனங்கள் எல்லோரும் அந்தப் பெண் பாவையர் மீது வைத்த விழிகளை வாங்காமல் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, வெட்கம், துக்கம், மோகம், ஆவேசம் முதலிய பலவகையான உணர்ச்சிகளால் மனவெழுச்சி கொண்டவராய் கோவிந்தபுரம் ஜெமீந்தாரது புதல்வரும் அசைவற்று இருந்தார். -

அந்தப் பொற்கொடிகள் இருவரும் நெடுந்துாரம் சென்று மறைந்த வரையில் அவரது விழிகள் வழித்துணை சென்று அதற்குமேல் செல்லமாட்டாமல் பின்தங்கின. ஆனால் அவரது உணர்வும் ஞாபகமும் உயிரும் அவரைவிட்டு அவர்களோடு கூடவே போய்விட்டன; அவரது வெற்றுடம்பு மாத்திரம்