பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடறகரை விபத்து 33

அவர்கள் தமது விஷயத்தில் எச்சரிப்படைந்து விடுவதன்றி, தம்மைப் பற்றிக் கெட்ட அபிப்பிராயம் கொள்ள நேரும் என்றும் நினைத்தவராய் மேலும் கால்நாழிகை நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து, அதன்பிறகு மோட்டார் வண்டியின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கிக் கடற்காற்று வாங்குகிறவர்போல அங்குமிங்கும் உலாவத் தொடங்கினார். விரக வேதனையால் அவரது தேகம் கருகத் தொடங்கியது. அவரது மனம் உருகிக் கரைந்தோடியது; அவர் பலவகையான துர் நினைவுகளைக் கொள்ளத் தொடங்கினார். அப்படிப்பட்ட நிலைமையில் அவர் மெல்ல உலாவியவண்ணம் வண்டிக்கார மினியனுக்கு அருகில் போய்ச் சேர்ந்தார்.

அப்போது அவன் தனது காலைத் தடவிக்கொடுத்து, அதன் சுளுக்கை வழித்துவிட்டுக் கொண்டிருந்தான்; அவன் தனக்கருகில் உலாவிய ஜெமீந்தாரது புத்திரனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்தான். அந்த இளைய ஜெமீந்தார் அன்பும் அநுதாபமும் நன்றாக ஜ்வலித்த முகத்தினராய் அவனை நோக்கி நயமாகப் பேசத் தொடங்கி, 'அப்பா அடேய் மினியா! உனக்கு நிரம்பவும் பலமாக அடிப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. இது நான் வேண்டுமென்று செய்த காரியமல்ல. இந்த மோட்டார் வண்டியில் ஒருவிசை தளர்ந்து போனதனால் இப்படிப்பட்ட துன்பமெல்லாம் நேர்ந்துவிட்டது. நீ என்மேல் கோபம் வைக்காதே; நீ படுகிற அவஸ்தையைக் காண எனக்குச் சகிக்கவில்லை. உனக்காவது ஏதாகிலும் உதவி செய்யாமல் மோட்டார் வண்டியை ஒட்டிக்கொண்டு போக என் மனம் இடந்தரவில்லை. ஒரு மருந்து செய்வதற்காக நான் வாங்கின பிராந்திப்புட்டி ஒன்று மோட்டார் வண்டிக்குள் இருக்கிறது. அதைக் கொண்டுவந்து கொடுக்கிறேன். புட்டியைத் திறந்து கால் சுளுக்கில் கொஞ்சம் ஊற்றித் தேய்த்தால், கால்நோவு குறையும்' என்று நயமாகக் கூறியவண்ணம் மோட்டார் வண்டியண்டை சென்று அதற்குள்ளிருந்த புதிய பிராந்திபுட்டியொன்றை எடுத்துவந்து, தமது சட்டைப்பைக்குள் கிடந்த பேனாக் கத்தியால் அதன் மூடியை விலக்கி, அவனது காலில் சிறிதளவு பெய்ய, மினியனது கோபம் ஒருவாறு தணியத் தொடங்கியது. அவன் தனது உள்ளங்கையால் அதை ஏந்தி இரண்டு மூன்று முறை வாங்கிவாங்கிக் காலில் தேய்த்துக் கொண்டான். அவன் செ.கோ.:-4