பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 35

கறவன். ஆனால் எனக்கு இந்தச் சீமச்சரக்குமேலே எம்பிட்டுப் பிரியம் இருந்திச்சு தெரியுமா? எங்கப்பன் ஒன்னோடெ தயவுனாலே இன்னெக்கித் திருப்தியாப் போட்டுக்கினேன். இன்னமே இந்த சுளுக்குக் கிளுக்கெல்லாம் போன எடம் தெரியாமப் பறந்து பூடும்; இனிமேலே ஒண்ணும் பயமில்லிங்க' என்று கூறிக் கை குவித்து அவரைக் கும்பிட்டான். உடனே இளைய ஜெமீந்தார், அடேய் மினியா! உனக்கு மாசம் எத்தனை ரூபாய் சம்பளம்? என்றார். மினியன்: எனக்கு முனுவேளே சோறுபோட்டு கட்டிக்கத் துணி

குடுத்து மாசம் 16 ருடா குடுக்கறாங்க. இளைய ஜெமீந்தார் : ஒகோ! சம்பளம் தாராளமாகத்தான் கொடுக்கிறார்கள். அவர்க்ள் பெருத்த பணக்காரர்கள் போலிருக்கிறது! மினியன் : ஒ! அவுங்களுக்கென்ன மவராசரு துபாசி ராசரத்தன x- மொதவியாருன்னா இந்த ஊருலெ சின்னக் கொயந்தைக் குக் கூடத் தெரியுமே! அவுங்களுக்குச் சரியா அம்பது லச்சத்துக்குப் பணம் கெடக்குது. ஆனால், அவரு போன வருசத்துலெ எறந்து பூட்டாரு. இப்ப இந்த ரெண்டு கொயந்தைங்கதான் இருக்கறாக, இளைய ஜெமீந்தார் : (மிகுந்த வியப்புற்று), அப்படியா இவர்கள் துபாஷ் ராஜரத்தின முதலியாருடைய பெண்களா! இவர்களுக்குக் கலியானம் ஆகிவிட்டதா? மினியன் : இன்னும் ஆவல்லிங்க. . இளைய ஜெமீந்தார் : இவர்களுடைய வீட்டில் இன்னம் யார்

யார் இருக்கிறார்கள்? மினியன் இந்தக் கொயந்தங்களோட் தாயாரு இருக்கறாங்க

வேறே யாரு மில்லிங்க. இளைய ஜெமீந்தார் : இவர்களோடு கூடப்பிறந்த ஆண்

பிள்ளைகள் ஒருவருமில்லையா? மினியன் ஆம்புள்ளெய பொறக்கல்லீங்க. இவுங்க ரெண்டு பேரும் ரெட்டையாப் பொறந்தவங்க, அம்பிட்டுத்தான். அதுக்குப் பொறவாலே புள்ளையே பொறக்கல்லீங்க.