பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

செளந்தர கோகிலம்



இளைய ஜெமீந்தார் : இவர்களுடைய பெயரென்ன?

மினியன் : மொதல்ல பொறந்த அம்மா பேரு கோகிலாம்பா அம்மா ரெண்டாவது பொறந்த அம்மா பேரு செளந்தர வல்லி அம்மா. இளைய ஜெமீந்தார் : இவர்கள் எங்கே இருக்கிறது? - மினியன் : பொரசெவாக்கத்துலே பூந்தமல்லி அயிரோட்டுலே

ஒரு பங்களாவுலெ இருக்க்ாங்க. இளைய ஜெமீந்தார் : இவர்களுக்கு ஜட்காவண்டி கொண்டு

வந்தாரே அந்த மனிதர் யார்?

மினியன் : அவுரு அந்த பங்களாவுக்குப் பக்கத்துலெ ஒரு ஊட்டுலே இருக்கறவரு. அவருக்கு இங்ங்னெ ஒரு ஆபிசுலெ உத்தியோவமாம்; இப்பத்தான் அவுரும் வந்தாரு ஒடனே திருவல்லிக்கேணிக்குப் போயி வண்டி கொண்டாந்தாரு.

இளைய ஜெமீந்தார் : அவர் இதற்குமுன் அந்த பங்களாவுக்குள்

வருகிறதுண்டா?

மினியன் : இல்லிங்க.

இளைய ஜெமீந்தார் : இங்கே வந்த அம்மாமார்களுக்கு ஏன்

இன்னமும் கலியாணம் ஆகவில்லை?

மினியன் : இறந்துபோன எசமான் இருக்கையிலேயே போன வருகத்திலேயே கண்ணாளம் பண்ணறது.ான்னு பார்த்தாரு அதுக்குள்ளற அவருக்கு ராசப்பொளவே களம்பி அதுனாலே திடீரென்னு அவரு எறந்து பூட்டாருங்க. இந்த ஒரு வருச காலமா அதுக்காவத்தான் நிறுத்தி வச்சாங்க; இன்னமே பண்ணுவாங்க. .

இளைய ஜெமீந்தார் : மாப்பிள்ளைகள் யாராவது நிச்சயமாயி

ருக்கிறார்களா?

மினியன் : பொண்ணு பாக்க யாரோ வாறாங்க போறாங்க, இன்னம் ஒண்ணும் தெகையல்லீங்க. மூத்த பொண்ணு நல்ல சாமார்த்தியசாலி. நல்ல தங்கமான கொணம் உசிரு போறதானாலும் கெட்டவளிக்குப் போவாதுங்க. சின்னக் கொயந்தெயும் நல்ல கொணந்தான். ஆனால், அதுக்குக் கள்ளம் கவடம் தெரியாதுங்க வெளுத்ததெல்லாம் பாலு: