பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 37

கருத்ததெல்லாம் தண்ணி, ஒலகத்துலெ இருக்கிற எல்லா மனிசரும் நல்லவங்க இன்னு அந்தக் கொயந்தே நெனைக்ர வளக்கம். அது ஆண்டவனெப் போல கல்மச மில்லாத சுத்தமான பொண்ணு. ரெண்டு பேரும் ரெண்டு ரெத்தனந்தான். ஆனா, சின்னத்தெ சொலவா ஏமாத்திப் புடலாம். பெரிசெ ஏமாத்த முடியாது. இளைய ஜெமீந்தார் : அப்படியா! அதிருக்கட்டும்; இவர்க

ளுடைய தாயார் எப்படிப்பட்டவர்கள்? மினியன் : அந்த அம்மாளுக்கும் ஒண்ணும் தெரியாதுங்க. இவுங்களும் சின்னக் கொயந்தெயும் ஒரு அச்சுங்க. அவுங்க ரெண்டு பேரும் மூத்த கொயந்தே சொல்றபடிதான் நடக்கறது வளமையிங்க. அவ்வாறு அவர்களிருவரும் பேசிக் கொண்டிருப்பதற்குள் மினியது மயக்கம் அபாரமாகப் பெருகி, அவன் உளறல், குளறல், இழுப்பு, பாட்டு முதலிய பலவகையான லக்ஷணங்களோடு, மேலே குறிக்கப்பட்ட மறுமொழிகளைக் கூறிக்கொண்டே போனவன் அப்படியே கீழே சாய்ந்துவிட்டான். அவனது உடம்பு கட்டிற்கடங்காமல் போய்விட்டது. அடுத்த நிமிஷத்தில் அவன் ஸ்மரணை தப்பி சுழுத்தி முனையை எட்டிப் பிடித்துவிட்டான். இளைய ஜெமீந்தார் நாலைந்துமுறை அவனைக் கூப் பிட்டுப் பார்த்துவிட்டு, அவன் அதற்குமேல் மறுநாள் வரையில் எழுந்திருக்க மாட்டான் என்பதை உணர்ந்து கொண்டவராய், உடனே சென்று தமது மோட்டார் வண்டியில் ஏறி உட்கார்ந்து, மைலாப்பூரை நோக்கி அதை விட்டுக் கொண்டே சென்றார். சற்றுமுன் அந்தப் பெண்மணிகள் இருவரையும் கண்ட உடனே அவரது மனநிலைமை எப்படி இருந்ததோ, அதைக் காட்டிலும் அப்போது ஆயிரமடங்கு அதிகரித்த சஞ்சலமடைந்ததாக இருந்தது. மினியன் சொன்ன வரலாற்றிலிருந்து அந்த யெளவன ரமணிகள் இருவரும் பெருத்த செல்வமுடையவர்கள் என்பதும், அவர்கள் கலியாணம் செய்து கொள்ளாமல் ஆண் துணையின்றி இருப்பவர்கள் என்பதும், மிகுந்த நற்குண நல்லொழுக்கம் உடையவர்கள் என்பதும் நன்றாக விளங்கவே அவரது மோக லாகிரியோடு பணத்தாசையும் பெரிதாக உண்டாயிற்று. அவர்கள் இருவரையும் தாமே மணந்து கொண்டால், அவர்களால்