பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

செளந்தர கோகிலம்



கிடைக்கும் சிற்றின்ப சுகத்தோடு, அவர்களது அளவற்ற செல்வம் முழுவதும் தமக்கே வந்து வாய்த்துவிடும் என அவர் நினைத்தார். செளந்தரவல்லி குது, வாது, கபடம் முதலியவைகளில்லாத பெண்ணாதலால், அவள் தம்மீது ஆசைகொள்ளும்படி செய்வது எளிதாகத் தோன்றியது; ஆனால் கோகிலாம்பாள் ஆழ்ந்த புத்தியும் திடமான மனதும் உடையவள் ஆதலால், அவளது மனதைத் திருப்புவது கடினமாகத் தோன்றியது. அப்படி இருந்தாலும், தாம் கோகிலாம்பாளை மயக்கி அவளை மணந்துகொண்டால், அவள் மூலமாகச் செளந்தரவல்லியையும் தாம் கலியாணம் செய்துகொள்வது சுலபமாகப் போய்விடும் என்ற ஒரு நினைவு தோன்றியது. ஆகவே, தாம் எப்பாடு பட்டாகிலும், முதலில் கோகிலாம்பாளை வசியப்படுத்தி அவள் தம்மீது பிரியம் கொள்ளும்படிச் செய்து மணக்கவேண்டுமென்ற உறுதியைக் கொண்டவராய் அந்த யெளவன ஜெமீந்தார் மைலாப்பூர் சாந்தோமிலிருந்த ஒரு பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்.

அந்தப் பங்களா அரைக்கால் மயில் நீள அகலம் பரவிய தாகவும், நாற்புறங்களிலும் மதிட் சுவரினால் சூழப்பட்டதாகவும் இருந்தது. அதன் நடுவில் இரண்டு உப்பரிக்கைகளையுடைய கட்டிடங்களும் அவற்றைச் சுற்றி அழகும் செழுமையும் நிறைந்த உத்தியானவனமும் இருந்தன.

அப்படிப்பட்ட சிறந்த வனமாளிகைக்குள் நுழைந்த அந்த யெளவன ஜெமீந்தார் மோட்டார் வண்டியை அதன் கொட்ட கைக்குள் நிறுத்தியபின், கட்டிடத்திற்குள் புகுந்தார். அவரது மனம் காமநோய் கொண்டு கட்டிலடங்காமல் தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தது. உடம்போ ஒய்ந்து தளர்ந்து காமஜூரத்தினால் கருகித் தத்தளித்தது. அவர் பார்த்தவிடத்திலெல்லாம் கோகிலாம்பாளின் குளிர்ந்த வடிவமும் செளந்தர வல்லியின் சுந்தர ரூபமும் ஜோடி ஜோடியாக நின்று அவரது உயிரைக் கொள்ளை கொண்டன. அவர்கள் இருவரும் குயிலைப் பழித்த கணிரென்ற குரலால் கிள்ளை மொழிவது போல மழலையாகப் பேசிய சொற்கள் அப்போதும் அவரது செவிகளில் ஒலித்து ரீங்காரம் செய்து அமிர்தத் துளிகளையும் பன்னீர்த் துளிகளையும் ஜிலீர் ஜிலீரென்று வீசிக் கொண்டிருந்தன. அவரது மனம் அந்த