பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 39

அதிருப மடமங்கையரது கண்கொள்ளா வனப்பிலேயே லயித்துப் போய் நின்றமையால் அவர் நேராகத் தமது சயன மாளிகைக்குள் நுழைந்து, அங்கே கிடந்த பளிங்கு மஞ்சத்தின் மேல் படுத்துக் கொண்டார். அவர் வழக்கமாகச் செய்யும் எந்தக் காரியத்தையும் கவனியாமலும், அன்னந் தண்ணிர் முதலிய எதிலும் தமது கவனத்தைச் செலுத்தாமலும், அந்த சொகுஸ்ான சயனத்தில் கிடந்து, நெருப்புத் தணல்களின்மேல் சயனித்தி ருப்பவர் போலத் தத்தளித்துப் புரளத் தொடங்கினார். அவர் அவ்வாறு கால் நாழிகை நேரம் தவித்திருக்க, அந்தச் சயனமாளி கையின் கதவைத் திறந்து கொண்டு ஒரு யெளவன ஸ்திரீ உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பதினெட்டு அல்லது இருபது வயசிற்கு மேலிராது. அவள், சிவந்து கொடிபோல இருந்த அழகிய சரீரமும், முகவசீகரமும் பெற்றவளாக இருந்தாள். விலை உயர்ந்த பாவாடை, தாவணி, கெளன் முதலிய ஆடை களையும், தங்க ஒட்டியாணம், வைரக் கம்மல், வைர மூக்குப் பொட்டு, காசுமாலை, வங்கி, காப்பு, கொலுசுகள் முதலிய ஏராளமான ஆபரணங்களையும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அணிந்திருந்தாள். அவளது நெற்றியில் மூன்றாம் பிறைச் சந்திரன் போலத் தீட்டப்பட்டிருந்த ஜவ்வாதுப் பொட்டும் அதற்குமேல் பளபளவென மின்னிய குஜிலிப் பொட்டும் அந்த வதனத்திற்கு மிகுந்த வசீகரத் தன்மையை உண்டாக்கின; புருவ விற்களில் தீட்டப்பட்டிருந்த ஜவ்வாதின் கருமையும் கண்ணிமைகளில் குயிற்றப்பட்டிருந்த அஞ்சனமையின் கருமையும் ஒன்றுகூடி அவளது கண்களின் அழகையும் முகத்தின் அழகையும் ஆயிரமடங்கு சோபிக்கச் செய்த்ன. அவளது உடம்பிலும் ஆடைகளிலும் அத்தர் பன்னீர் முதலிய பரிமள கந்தங்கள் தெளிக்கப் பெற்றிருந்தன. விசாலமாகவும் அழகாகவும் பின்னி விடப்பட்டிருந்த கூந்தலின் பின்னல் முழங்காலளவு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் துணியிலிருந்த ஊதாநிறப் பட்டு நாடாவும் அதன் மேல் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கு காணப்பட்ட வைர ஜடை பில்லைகளும் அவளது பின்னழகைப் பதின்மடங்கு பெருக்கிக் காட்டின. இயற்கையழகும் செயற்கையழகும் அபரிமிதமாக நிரம்பப் பெற்றவளாய் வந்த அந்த மங்கை, தனக்குத் தெரியாமல் வந்து இளைய ஜெமீந்தார் படுத்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டு, மகிழ்ச்சியும் சந்தோஷமும்