பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

செளந்தர கோகிலம்



திருஷ்டியில் பட்டுக் கொண்டு வந்தார்கள். ஆகையால், அவன் அவர்களிடத்தில் மிகுந்த அன்பும் பிரேமையும் கொண்டிருந்த தன்றி, அப்படிப்பட்ட பெருத்த செல்வத்திலிருக்கும் அவர்க ளோடு தான் ஒரு நாளாகிலும் பேசப் போகிறோமா என்று பன்முறையும் நினைத்து நெடுமூச் செறிந்திருந்தவன் ஆகையால், அன்றைய தினம் அவர்கள் தனக்கு முன்னால் போகையில் அவர்களுக்கு அந்த விபத்து நேர்ந்ததும், அதிலிருந்து அவர்களை மீட்கும்படியான சந்தர்ப்பம் தனக்கு வந்து வாய்த்ததும் தெய்வத்தின் சூழ்ச்சியென்று அவன் நினைத்து மிகுந்த மனவெழுச்சியும் உற்சாகமும் கொண்டவனாய் ஆநந்த பரவசம் அடைந்து மெய்ம்மறந்து உட்கார்ந்திருந்தான். அவர்களில் கோகிலாம்பாள் யாரென்றும், செளந்தரவல்லி யாரென்றும் வேற்றுமை தெரிந்துகொள்ளக் கூடாதபடி அந்தக் கிள்ளை மொழியினர் இருவரும் ஒரே வடிவத்தினராகக் காணப் பட்டனர். ஆனாலும், அவர்கள் பேசியபோது ஒருத்தி விவேக முதிர்ச்சியையும், ஆழ்ந்த நற்குணத்தையும், ஸ்திரீகளுக்குரிய அடக்கத்தையும் காட்டியதும், இன்னொருத்தி குழந்தைபோலக் கள்ளம், கபடம் முதலியவின்றி சுத்த ஸ்வரூபிணியாக இருந்ததும் நன்றாகத் தெரிந்தன. ஆகையால் அவனது மனத்தில் கோகிலாம் பாளது இனிய வடிவமே பதிந்து அவனது உள்ளத்தில் அமிர்த ஊற்று சதாகாலமும் பெருக்கெடுக்கும்படி செய்து கொண் டிருந்தது. அவள் சகல கலைகளுக்கும் சகல ஞானங்களுக்கும் இருப்பிடமான சரஸ்வதி தேவிதானோ என்ற ஐயமும், மதிப்பும், பயபக்தியும், நெகிழ்வும் அவனது மனத்தில் அடிக்கடித் தோன்றின. செளந்தரவல்லி அடிக்கடி கடைக்கண் பார்வையால் தன்னை நோக்கி, தான் அவளைப் பார்க்கும் காலத்தில், அவள் சகிக்க முடியாத நாணமும் மடமும் தோற்றுவித்தது நமது யெளவன குமாஸ்தாவின் மனதைக் கவர்ந்ததை விட, கோகிலாம்பாள் அடங்கி ஒடுங்கி அசைவற்று அழகின் திரளாக உட்கார்ந்திருந்த அற்புதக் காட்சியே அவனது மனதை அதிகமாகக் கொள்ளை கொண்டது. அவ்வாறு அவனது மனம் கரைகடந்து பொங்கிக் குதூகலித்தது. ஆனாலும், அவன் அடிக்கடி அதை அடக்க முயன்று கொண்டிருந்தான். தான்

சொற்ப சம்பாத்தியமுள்ள ஒரு குமாஸ்தாவாக இருக்க,