பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 45

வாசற்படியின் இரும்புக் கதவுகள் மூடித் தாளிடப் பெற்றிருந் தன. அவ்விடத்தில் வழக்கமாகக் காவல் காத்திருக்கும் வேலைக் காரன் ஏதோ தேகபாதையை நிவர்த்தித்துக்கொள்ளும் பொருட்டு அப்போதுதான் தோட்டத்திற்குள் போனான். வாசம் கதவுகள் மூடப்பட்டிருந் ததையும், வேலைக்காரன் எவனும் இல்லாதிருந்ததையும் கண்ட நமது யெளவன குமாஸ்தா சடக்கென்று வண்டியை விட்டுக் கீழே குதித்துக் கதவண்டை ஒடி அதைத் திறந்துவிட, உடனே வண்டிக்காரன் வண்டியைத் திருப்பி தடதடவென்று உள்ளே ஒட்டத் தொடங்கினான். வாசற்படியண்டை நின்ற யெளவன குமாஸ்தா, தானும் உள்ளே போவதா, அல்லது பாட்டையோடு தனது ஜாகைக்குப் போவதா என்ற சந்தேகம் கொண்டு இரண்டொரு நிமிஷநேரம் தயங்கி அவ்விடத்திலேயே நிற்க, அதற்குள் வண்டி நெடுந்துாரம் போய் விட்டது. அந்த வாசலிலிருந்து, தோட்டத்தின் நடுமத்தியிலிருந்த வாசஸ்தலம் அரை பர்லாங்கு தூரத்தில் இருந்தது அன்றி, அதற்குச் செல்லும்பாதைகப்பிக் கல்லால் மேடுபள்ளமின்றி வழு வழுப்பாகப் போடப்பட்டுத் தாரினால் சமமாக மெழுகப் பெற் றிருந்தது. அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் வாதா, செளக்கு, நெட்டுலிங்கை, மருதாணி, கமுகு, குட்டைத் தென்னை முதலிய மரங்கள் கலப்பாகவும் வரிசையாகவும் வைத்து அழகாக வளர்க்கப்பட்டுப் பாம்புபோல வளைந்து வளைந்து சென்றன. அந்த இரட்டை மரப்பாத்திகளின் உட்புறங் களிலும் வெளிப்புறங்களிலும் இங்கிலீஷ் குரோடன்கள் கண் கவர் வனப்போடு செழித்து வளர்ந்த பூத்தொட்டிகள் ஒன்று போலவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருந்தன. இருபத்தைந்து கஜதுரத்திற்கு ஒரிடத்தில் வெள்ளை, சிகப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம் முதலிய சப்த வர்ணங்களில் மின்சார விளக்குகள் நவரத்னக் கனிகள் போலக் கொத்துகள் கொத்துகளாக வளைந்து நின்று மிகுந்த பிரகாசத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. கண்கண்ட தூரம் வரையில் நீண்டு பரவி ஒரு பெருத்த மண்டலாதிபதியின் அரண்மனையும் உத்தியான வனமும் போலக் காணப்பட்ட மனோக்கியமான அந்தச் சிங்கார மாளிகையில் எங்கு பார்த்தாலும் பல வர்ணங்களைக் கொண்ட மின்சார விளக்குகளே நிறைந்து, அது உலகை மயக்கும்