பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

செளந்தர கோகிலம்



மோகினிதேவியின் மாய மணிமண்டபமோ என்ற ஐயத்தை உண்டாக்கியது. அப்படிப்பட்ட உன்னதமான வன மாளிகையில் உட்புறத்து மாட்சியை நமது யெளவன குமாஸ்தா ஒருநாளிலும் பார்த்து அறியாதவன் ஆதலால், வாசற்படியைக் கடந்து உட்புறத்தில் இரண்டோரடி நடந்து சென்ற அந்த யெளவனச் சிறியோன் திக் பிரமையும் திகைப்பும் அடைந்தான். அப்படிப் பட்ட தெய்வலோகத்திற்குள் நுழையவும், அதன் சொந்தக் காரர்களான கோடீசுவரர்களிடத்தில் சமமாகப் பழகி நட்பு செய்து கொள்ளவும், தனக்கு எவ்வித யோக்கியதையும் இல்லை என்ற எண்ணம் அவனது மனத்தில் தோன்றி அவனது கால்களைப் பின்னுக்கு இழுத்தன. கேவலம் குமாஸ்தா வேலைசெய்து சொற்ப வருமானம் சம்பாதித்து வயிறு வளர்க்கும் ஏழையாகிய தான், அந்தப் பெருமாட்டிப் பெண்களைப் பற்றி மனதால் நினைப்பதற்கும் அருகமற்றவன் என்று நினைவு கொண்ட அந்தப் புருஷன், தான் அவ்வளவோடு நிற்பதே மரியாதை என்றும் அதற்கு மேலும் உள்ளே நுழைந்து அவர்களது காரியங்களில் தலையிடுவது அழகல்ல என்றும் தீர்மானித்துக் கொண்டவனாய் இரண்டொரு நிமிஷ நேரம் அவ்விடத்தி லேயே தயங்கித் தயங்கி நின்றான். முன்பின் பேசிப் பழகாத மனிதரது ஜாகைக்குள் தான் போய் அதிகமாக முந்தக்கூடாது என்று அவனது மனம் அவனுக்கு நற்புத்தி கூறியது. ஆனாலும், அவனது உள்ளம் கோகிலாம்பாளினது அழகிலும் நற்குணங் களிலும் லயித்துப் போயிருந்தமையால், கால்கள் அவ்விடத் திலேயே வட்டமிடத் தொடங்கின. அந்தப் பெண் மயிலார் இருவரும் ஒருகால் தன்னையும் உள்ளே அழைத்துத் தனக்கு உபசார வார்த்தைகள் சொல்லுவார்களோ என்ற சந்தேகமும் அவனது மனத்தில் உதித்தது. ஆனால், அவர்கள் மிகுந்த நாணமும், லஜ்ஜையுமுடைய யெளவனப் பெண்கள். ஆதலால், தான் அவ்வளவு பெரிய மரியாதையை அவர்களிடம் எதிர் பார்ப்பது தகாது என அவன் அடுத்த நிமிஷத்தில் எண்ணினான். தவிர, அதற்கு மேல், அவர்களுக்குத் தன்னால் ஆக வேண்டிய உதவி எதுவுமில்லை. ஆகையாலும், அப்படியே ஏதேனும் அலுவலிருந்தாலும், அவர்கள் நிரம்பவும் நாகரீகமான நடத்தை உடையவர்களாதலால், தன்னை ஏவாமல் அவர்களது பணி