பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

செளந்தர கோகிலம்



இழவு ஜனங்களோடு இதே மாரடியாகப் போய்விட்டதே' என்று பொதுவாகப் பேசி வழிப்போக்கர்களை எல்லாம் துஷித்தவனாய் மிகுந்த கோபத்தோடு வந்து உட் புறத்தில் இருந்தபடி கதவுகளை மூடித் தாளிட்டுக் கொண்டு மெல்ல அப்பால் நடந்தான்.

அந்தக் காவலாளியின் நடத்தையினால் மிகுந்த வெட்கமும் மனத் தாங்கலும் அடைந்த நமது யெளவனப் புருஷன் அதன் பிறகு அவ்விடத்தில் நிற்காமல், பாதையோடு தனது ஜாகையை நோக்கி நடக்கலானான்.

அந்த இடத்திலிருந்து அவனது இருப்பிடம் சுமார் அரை மயில் தூரத்திற்குமேல் இருந்தது. அந்தக் காவற்காரனால் தனக்கு ஏற்பட்ட இழிவைப் பற்றிய விசனம் அவனது மனத்தில் குடி கொண்டு வருத்தத் தொடங்கியது. ஆனாலும், அந்த வேலைக் காரன் படிப்பும் நல்லறிவும் இல்லாத கேவலமான மூட வேலைக்காரன். ஆகையால், அந்த நிகழ்ச்சியைத் தான் பொருட் படுத்தக் கூடாதென்று அவனது மனம் அவனுக்கு நற்புத்தி புகட்டியது. ஆகையாலும், அவனது கவனம் முழுதும் வேறொரு முக்கியமான விஷயத்தில் வலுவாகச் சென்று கொண்டே இருந்தமையாலும், அவன் ஒரு பர்லாங்கு தூரம் போகுமுன், அந்த விஷயத்தை முற்றிலும் மறந்தே போய்விட்டான், மாறி மாறி அந்த இரண்டு பேடன்னங்களின் அழகிய வடிவங்களே அவனது மனத்தில் தோன்றித் தோன்றித் தாண்டவமாடினது அன்றி கடற்கரையில் அன்று மாலையில் நடந்த சம்பவம் முழுதும் அப்போதே நடப்பதுபோல அவனது அகக்கண்ணில் புலனாயிற்று. அவன் அதே நினைவுகளில் ஈடுபட்டவனாய்த் தனது உயிரையும் உணர்வையும் அந்த வனமாளிகைக்குள் செல்ல விடுத்து வெற்றுடலோடு நடைப்பிணம் போலத் தன்னையும் உலகையும் மறந்து சென்றுகொண்டே இருந்தான். செளந்தர வல்லியைப் போவில்லாமல், கோகிலாம்பாள் சமயோசித தந்திரமும், வியாவகார ஞானமும், லெளகீக மரியாதையும் நன்றாக உணர்ந்தவளாக இருந்தும், கடைசியில் தான் அவர்களை விட்டுப் பிரிந்து வந்த காலத்தில் வண்டிக் காரன் மூலமாகவாகிலும் ஓர் உபசார வார்த்தையேனும் சொல்லவில்லையே என்ற நினைவும்