பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 51

அவனைத் தொடர்ந்து சென்றாள். அவன் வாங்கிக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்த சாமான் அவனிடத்தில் காணப்படா ததும் வியப்பை உண்டாக்கியது. ஆகவே விஷயம் இன்னது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று அந்த அம்மாளினது மனம் பதறியது. அவள் தனது மைந்தனிடத்தில் வைத்திருந்த வாஞ்சை அளவு சங்கியை இன்றி அபாரமாக இருந்ததனாலும், அவனும் பயபக்தி விசுவாசம் பணிவு முதலிய குணங்கள் நிரம்பப் பெற்றவனாய்த் தனது தாய்க்குக் கீழ்ப்படிந்து நடப்பவ னானாலும், தாய் தனது புத்திரனே இனி வீட்டிற்கு அதிகாரி என்ற எண்ணம் கொண்டவளாய் அவனிடத்தில் அன்போடு கலந்த மரியாதை, பயம் முதலியவற்றையும் காட்டிவந்தாள். ஆகையால், விஷயம் இன்னது என்பதை உடனே சொல்ல அவ னுக்கு மனமில்லை என்பதைக் கண்டுகொண்ட கற்பகவல்லி யம்மாள். அவனே அதை மறுபடியும் சொல்லும் வரை தான் திரும்பவும் வற்புறுத்தக் கூடாதென்று மெளனமாகவே சஞ்சலம் அநுபவித்திருந்தாள்.

உள்ளே நுழைந்த யெளவனச் சிறியோன் தனது உடைகளை யெல்லலாம் கழற்றி மூளைகளில் மாட்டி வைத்துவிட்டு, முற்றத் திலிருந்த தண்ணிர்க் குழாயண்டை போய்க் கைகால்களை எல்லாம் சுத்தம் செய்துகொண்டு கூடத்திற்கு வந்து, கடிகாரத் திற்குச் சாவிகொடுத்து வைத்துவிட்டு, மாடத்திலிருந்த விபூதி மடலில் கையை நுழைத்து, விபூதி எடுத்து நெற்றி மார்பு முதலிய இடங்களில் அணிந்துகொண்டு கூடத்திலிருந்த ஊஞ்சல் பலகையின்மேல் உட்கார்ந்து கொண்டான்.

அவனது நிதானத்திற்கும் கற்பகவல்லி அம்மாளினது பதைப் பிற்கும் முற்றும் பொருத்தமில்லாமலே இருந்தது; அந்த நற் குணத் தாய் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். அவன் சொல் லுவதாகத் தோன்றவில்லை. அவனது முகமோ சந்தோஷமற்று வாட்டம் பெற்றதாகவே காணப்பட்டது. ஆகவே, கற்பகவல்லி யம்மாள் அதைக் கண்டு சகியாதவளாய், தான் எப்படிப் பேசுவ தென்பதைச் சிறிது நேரம் உணராதிருந்த பிறகு வேறே விஷயத் தைப் பற்றிப் பேசுகிறவள் போல, "அப்பா கண்ணபிரான்! உடைந்துபோன சிமினிக்குப் பதில் வேறே சிமிணி, சைனா பஜாருக்குப் போய் வாங்கி வருவதாகச் சொன்னாயே! அதை