பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 55

மாத்திரம் இழக்கக் கூடாது என்பதை மறந்த விட்டாய் போலிருக்கிறது!’ என்று அவனை அன்பாகக் கடிந்து பேசினாள்.

அந்த யெளவனப் புருஷன் அதுவரையில் தனது தாயினி டத்தில் எந்த விஷயத்தையும் ஒளித்தே பேசி அறியாதவனாக இருந்தாலும், அன்றைய தினம் அவனது மனம் கோகிலாம் பாளின் மீது சென்ற விஷயத்தை தான் தனது தாயினிடத்தில் வெளியிடக் கூடாது என்று மறைத்ததன்றி, தான் குதிரை வண்டி யில் ஏறி வந்ததற்கும் ஒரு சமாதானம் கூறத் தொடங்கினான். அவர்கள் தங்களது வண்டிக்காரனை கடற்கரையிலேயே விட்டு வர நேர்ந்ததாகையால், அவர்கள் குதிரை வண்டியில் இரவில் தனியாக வர அஞ்சித் தன்னையும் துணையாக வரும்படி அழைத்தார்கள் என்று ஒரு முகாந்திரம் கூறினான். ஒருவன் தனது தாய் தந்தையரிடத்தில் உத்தம புத்திரனாகவும், சற்குணங்கள் நிறைந்த சீலனாகவும் ஒழுகிக் கீழ்ப்படிந்து நடந்து வருவது அவன் ஒரு ஸ்திரியை மணந்து அவளோடு தனித்துப் பேச ஆரம்பிக்கும் காலம் முதல் கெட்டுப் போவதன்றி, அவனது நடத்தையும் பேதப்படுகிறது என்பது பெரும்பாலும் உலக அநுபவமாக இருந்தும் வருகிறது அல்லவா, அதற்கிணங்க, நமது கண்ணபிரான் அதுகாறும் தனது தாயினிடத்தில் பொய் சொல்லி அறியாத சீலனாக இருந்தும் அவனது இயற்கையான குணத்தை மாற்றி அவனை பேடியாக ஆக்கி விட்டது. அப்படி இருந்தும் கற்பகவல்லியம்மாள் தனது புத்திரனிடத்தில் அளவற்ற வாஞ்சை உடையவளாக இருந்தமையால், அவன் சொன்ன வரலாறுகளை எல்லாம் உண்மை யென்றே நம்பினவளாய், 'அப்படியானால், இப்போது குதிரை வண்டியில் வந்த நீ அவர்களுடைய பங்க ளாவுக்குள்ளே போயிருந்தாயா? அங்கே யார் யார் இருக்கி றார்கள்? அந்தப் பெண்களின் தாயார் நிரம்பவும் கிழவியாக இருக்கிறார்களா? அல்லது, சாதாரண வயசுடையவராக இருக் கிறார்களா? அவர்கள் நம்முடைய குடும்ப விவரங்களையெல் லாம் விசாரித்தார்களா?” என்று வினவ, அதைக் கேட்ட கண்ண பிரான் அவர்கள் தன்னைக் கடைசியில் அலட்சியம் செய்து விட்டுப் போய் விட்டார்களென்று சொல்ல மாட்டாதவனாய் இன்னொரு பொய் சொல்ல நினைத்து, "பங்களாவின் வாசலில் வண்டி வந்தவுடனே, அதை நிறுத்தச் செய்து, நான் இறங்கி