பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் . 57

நீ ஆபீசுக்குப் போக வேண்டியவன் அல்லவா? இன்று ராத்திரி நீ பட்டினி கிடந்தால், நாளைய தினம் ஆபீசுக்கு நடந்து போக வும், அங்கே சாயுங்காலம் வரையில் வேலை செய்யவும் வலு விருக்குமா? அதெல்லாம் சரியல்ல. நீ வீட்டைப் பார்த்துக் கொண்டிரு பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போய், 2 சோடா புட்டி வாங்கி வருகிறேன்' என்று வற்புறுத்திக் கூறினாள்.

அதைக் கேட்ட கண்ணபிரான், தான் பட்டினியாய்ப் படுக்கத் தனது தாய் தன்னை விமாட்டாள் என்பதை உணர்ந்து, “சரி, இதற்காக நீங்கள் இந்த இருட்டில் கடைக்குப் போக வேண்டாம். இன்னம் ஒரு நாழிகை நேரம் கழித்து ஏதோ சாப்பிட முடிந்த வரையில் சாப்பிட்டுப் பார்க்கலாம்” என்று ஸமரஸ்மாகக் கூற, அவள் அதற்கு இணங்கினாள்.

ஒரு நாழிகை நேரமும் கழிந்தது. கண்ணபிரானது உயிரும் மனதும் உணர்வும் கோகிலாம்பாளின் மீது சென்று லயித்திருந் தமையால், அவனது மனம் ஆகாரத்திலும், தூக்கத்திலும் செல் லாமல் மிகுந்த சஞ்சலத்தினால் உலப்பப்பட்டிருந்தது. அவனது வயிற்று மந்திப்பு மனோ வியாதியினால் ஏற்பட்ட பிணியா தலால் மனோவியாதிக்குத் தகுந்த சிகிச்சை செய்தாலன்றி, எவ்வளவு நேரம் கழிவதானாலும் வயிற்றில் பசியுண்டாவதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒருநாழிகை நேரம் கழிந்த உடனே கற்பகவல்லியம்மாள் மறுபடியும் தனது பாட்டைப் பாடத் துவக்கினாள். தான் அவளோடு சச்சரவு செய்வதில் பயனில்லை யென்றும், எவ்வளவு நேரமானாலும், தான் உண்ணாமல் அவள் உண்ணாள் என்றும், முடிவில் அவளது பிடிவாதமே வெற்றி பெறும் என்றும் கண்ட கண்ணபிரான், "சரி, இன்னமும் வயிறு சரிப்படாமலேதான் இருக்கிறது. இருந்தாலும் பாதகமில்லை; சென்றவரையில் செல்லட்டும்' என்று கூறியவண்ணம் எழுந்துபோய் இலையண்டையில் உட்கார்ந்துகொண்டு ஒரு கவளம் எடுத்து வாயில் வைக்க அது உள்ளே செல்லமாட்டாமல் குமட்டல் எடுத்தது. அவன் சாதத்தைப் பிசறிப் பிசறி உருட்டி உருட்டி வாயில் வைத்து உண்பவன் போலப் பாசாங்கு செய்து ஏதோ சிறிதளவு உட்கொண்டுவிட்டவன்போல, "சரி; இதற்கு மேல் செல்லமாட்டேன் என்கிறது; அதிகமாகத் தொந்தரவு செய்