பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 61

தடவென்று கதவை இடிக்கவே அந்த ஒசையைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் அதற்கு முன் எவரும் அவ்வாறு வந்து கதவை இடித்ததை அறியாதவளாதலால், ஒருவாறு வியப்ப டைந்தவளாய்ச் சமயலறையை விட்டுக் கூடத்திற்கு வந்து, 'தம்பி யாரோ கதவைத் தட்டுகிற ஓசை கேட்கிறது! நாமிருப்பது ஒரு மூலைக்காடு; நம்மைத் தேடிக் கொண்டு இவ்வளவு தூரம் யார் வரப்போகிறார்கள்!' என்று வியப்பாகச் சொல்லிக் கொண்டே வாசற்பக்கம் போய்த் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். -

கதவை யாரோ இடிக்கிறார்கள் என்று தனது தாய் சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் அதை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல், கோகிலாம்பாள் கோகிலாம்பாள் என்று ஜெபம் செய்வதிலேயே தனது சிந்தை முழுமையும் செலுத்தி உலகை மறந்து உட்கார்ந்திருந்தான். அந்தச் சமயத்தில் கற்பக வல்லியம்மாள் பைத்தியம் கொண்டவள்போல மிகுந்த ஆவ லோடும் ஆத்திரத்தோடும் தடதடவென்று வாசலிலிருந்து உள்ளே ஓடிவந்து, தணிவான குரலில் ரகசியமாகப் பேசிய வண்ணம், 'தம்பி தம்பி வாசலில் ஒரு பெட்டி வண்டி வந்திருக் கிறது. அடுத்த பங்களாவிலிருக்கும் துபாஷ் முதலியாருடைய சம்சாரம் வந்திருக்கிறார்களாம். கதவை இடித்த வேலைக்காரிகள் இன்னார் வந்திருக்கிறார்கள் என்று என்னிடத்தில் சொல்லி விட்டு வண்டியிலிருக்கும் அந்த அம்மாளை அழைத்துவரப் போயிருக்கிறார்கள், அந்த அம்மாள் வந்தது என்ன காரணமோ தெரியவில்லை. நேற்றைய தினம் நீ அவர்கள் விஷயத்தில் ஏதாவது தவறாக நடந்து விட்டாயா? அதை என்னிடத்தில் சொல்லி முறையிட வருகிறார்களா? உண்மையை மறைக்காமல் சொல்” என்று மிகுந்த பதைப்போடு கூற, எதிர்பாராத அந்தச் செய்தியைக் கேட்ட கண்ணபிரான் கரைகடந்த வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் அடைந்து திடுக்கிட்டுத் தனது ஆசனத்தை விட்டு எழுந்து, 'ஆ துபாஷ் ராஜரத்ன முதலியாருடைய சம்சாரமா வந்திருக்கிறார்களாம்! அவர்களுடைய யோக்கியதை எங்கே நாமெங்கே இது ஆச்சரியமாக இருக்கிறதே! நான் எவ் விதமான தவறும் செய்யவில்லையே! அவர்கள் வித்தியாசமான காரியம் எதற்கும் வந்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும்