பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 69

செய்யும் காரியம், நம்முடைய மனசிலுள்ள பயபக்தி விசுவாசத்தையும் நன்றியறிதலையும் வெளிப்படையாகக் காட்டுவதற்கே அன்றி வேறல்ல. அதுபோல நாங்கள் இந்த வஸ்துக்களைத் தங்களிடம் சேர்ப்பிப்பது, தங்களுடைய இல்லா மையை நீக்கவேண்டுமென்ற கருத்தோடு செய்யப்படுவதுமல்ல; தங்களுடைய குமாரர் செய்த உதவிக்குச் சமமான பெறுமானமாக எண்ணிக் கொடுக்கப்படுவதுமல்ல. எங்களுடைய மனம் தங்களுடைய விஷயத்தில் எவ்வளவு தூரம் கடமைப்பட்டி ருக்கிறதென்பதை வெளிப்படையாகக் காட்டுவதற்கே நாங்கள் இந்தத் தாம்பூலத்தைக் கொடுப்பது. தாங்கள் எப்படியும் இதை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்' என்று நயமாகவும் தேன்போல இனிமையாகவும் மொழிய, அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் சந்தோஷப் பெருக்கினால் நகைத்து, "சரி; சரி, நன்றாகச் சொல்லுகிறீர்கள்! இவ்வளவு பெரிய மரியாதை களுக்கே நாங்கள் அருகமற்றவர்கள் என்று நான் சொன்னால், கடவுள் உலகையெல்லாம் படைத்து நம்மைக் காத்து நமக் கெல்லாம் செய்யும் உதவிக்கும், என் மகன் செய்த அற்ப உதவிக் கும் உவமானம் சொல்லி, இன்னமும் எங்களை அதிகமாகப் பெருமைப் படுத்துகிறீர்கள். சரி சரி, நான் தங்களுடைய சொற் படி ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறே ஏதாகிலும் பேசினால், மரியாதை அதிகப்படுகிறதேயன்றிக் குறையாது போலிருக்கிறது. இருந்தாலும் என் மனசில் ஒரு விஷயம் மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. என் மகன் தான் ஏதோ அபாயத்தில் உதவி செய்தானென்று அவனுக்கு நீங்கள் சன்மானம் செய்கிறீர்கள். இதில் விலையுயர்ந்த சேலை முதலியவைகளையெல்லாம் வைத் திருக்கிறீர்களே. நான் என்ன காரியம் செய்துவிட்டேன்? ஒரு மூலையில் விழுந்த கிடந்த எனக்கென்ன சன்மானம் வேண்டி யிருக்கிறது' என்று தமாஷாகக் கூறினாள். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், "இப்படிப் பட்ட பரோபகார குணமும், தரும சிந்தையும், சகலமான நற்குணங்களும் பொருந்திய சற்புத்திரரைப் பெற்ற உத்தமியான தங்களுக்குத்தானே முதலில் மரியாதை செய்ய வேண்டும். தாங்கள் எவ்வித ஆட்சேபணையும் சொல்லாமல் இவைகளை ஏற்றுக்கொள்வதன்றி. தாங்களும் தங்களுடைய புத்திரரும் இப்போதே புறப்பட்டு எங்களுடைய