பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

செளந்தர கோகிலம்



பங்களாவுக்கு வந்து எங்களைக் கெளரதைப் படுத்த வேண்டும்" என்று நயமாக இறைஞ்சிக்கூற, அதைக்கேட்ட கற்பது வல்லியம்மாள் அந்த வேண்டுகோளை மறுக்க மாட்டாமலும், உடனே ஒப்புக் கொள்ள மாட்டாமலும் இருந்து சிறிது நேரம் தவித்தவண்ணம் ஏதோ சிந்தனை செய்து, "இம். சரி; இவைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டேன். ஆனால், விருந்துக்கு வருகிற விஷயத்தில் ஒர் இடைஞ்சல் இருக்கிறது. என்னுடைய மகன் நேற்றையதினம் இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபின் நிரம்பவும் தேக அசெளக்கியப்பட்டு, ஆகாரமில்லாமலும் தூக்கமில்லாமலும் இரவெல்லாம் நிரம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் இப்போதுதான் தட்டுத்தடுமாறி எழுந்து உட்கார்ந்தான். இராத்திரி முழுவதும் நானும் கண்மூடாமல் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்து அவஸ்தைப்பட்டு, இப்போதுதான் சமையலறைக்குப்போய் அவனுக்கு வேண்டிய காப்பி முதலிய ஆகாரங்களைத் தயாரித்தேன். தாங்களும் வந்தீர் கள். பையனுக்கு இப்போதாவது சொற்ப ஆகாரம் கொடுத்து உடம்பை அலட்டாமல் கொஞ்சநேரம் படுத்திருக்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதோடு, அவன் 10 மணிக்கு ஆபீசுக்குப் போக வேண்டியவனாகவும் இருக்கிறான்; இந்தச் சமயத்தில் தாங்கள் விருந்துக்கு அழைக்கிறீர்கள். தங்களுடைய மனசுக்கு மாறாக நடப்பதும் சரியல்ல. சந்தர்ப்பம் இப்படி இருக் கிறது. தாங்கள் எப்படிச் சொன்னாலும் அப்படி நடந்து கொள்ளத் தடையில்லை' என்று ஈரொட்டாகப் பேசினாள்.

உடனே பூஞ்சோலையம்மாள், "அப்படியா சங்கதி! தங்க ளுடைய புத்திரர் எப்படி அசெளக்கியப்பட்டு இரவெல்லாம் கஷ்டப்பட்டாரோ, அதுபோலவே என்னுடைய மூத்தபெண் பங்களாவுக்கு வந்தது முதல் பொழுது விடியும் வரையில் தேக அசெளக்கியத்தினால் மிகுந்த வேதனையடைந்து முக்கி முனகி மகா சங்கடப்பட்டாள். ஆனால் அவள் பொழுது விடிந்த வுடனே எழுந்து தன்னுடைய உடம்பின் கோளாறையும் கவனி யாமல், தங்களையும், தங்களுடைய புத்திரரையும் எப்படியாவது அழைத்து வந்து விருந்துண்பித்து மரியாதை செய்ய வேண்டு மென்று சகலமான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாள். வேறே யாராவது அனுப்பினால் தாங்கள் ஒருகால் வராமலிருந்து