பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 71

விடுவீர்களோ என்ற சந்தேகத்தினால், அவள் என்னையே அனுப் பினாள். நான் சந்தோஷ சங்கதியே கொண்டுவர வேண்டு மென்று அவள் சொல்லியனுப்பி இருக்கிறாள். ஆகையால் நான் இப்போதுபோய் நீங்கள் வரவில்லையென்று சொன்னால், அவளுடைய மனசு நிரம்பவும் கஷ்டப்பட்டுப் போகும். ஆனால் தாங்கள் சொல்வதைப் பார்த்தால், தங்களையும் நான் வற்புறுத்துவது சரியாகத் தோன்றவில்லை. என்னுடைய நிலைமை தரும சங்கடமானதாக இருக்கிறது. இதை ஒருவிதமாக முடிவு செய்ய நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். எல்லாவற் றிற்கும் தங்களுடைய புத்திரரோடு கலந்து யோசனை செய்து, அவருடைய தேகஸ்திதி சரியாக இருந்தால், இன்றைக்கு மாத்திரம் ரஜா எழுதி ஆபீசுக்கு அனுப்பிவிட்டு, எங்களுடைய பங்களாவுக்கு வர செளகரியப்படுமா என்பதைக் கேட்டுப் பாருங்கள். எங்களிடத்தில் எத்தனையோ குமாஸ்தாக்களும் ஆள்களும் இருக்கிறார்கள். எவனாவது ஒருவனிடத்தில் ரஜாக் கடிதத்தைக் கொடுத்து உடனே ஆபீசுக்கு அனுப்பிவிடச் செய்வோம்” என்றாள்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள், "அப்படியானால் தங்களுடைய குழந்தையும் நோயாகவா இருந்தது! சரி சரி! நேற்று கடற்கரையில் உண்டான மன அதிர்ச்சியால் இவர்களுடைய உடம்பு நிரம்பவும் நெகிழ்ந்து போயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தலைக்கு வந்த அவகேடு தலைப்பாகையோடு போயிற்றென்பது போல, நம்மெல்லோருக்கும் மலைபோல வந்த விபத்தை ஈசுவரன் தான் பணிபோல விலக்கி வைத்தான்; இவ்வளவாகிலும் நாம் சந்தோஷமாக ஒருவரையொருவர் பார்க்கும்படியாக ஏற்பட்டதே! அது சுவாமியின் செயல்தான் சரி, இருக்கட்டும். தாங்கள் சொல்லுகிறபடி, நான் போய் பையனிடத்தில் கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டெழுந்து தாழ்வாரத்திலிருந்து ஒரு காமரா அறைக்குள் நுழைந்து உட்கார்ந்திருந்த கண்ணபிரானிடம் போய்ச் சேர்ந்தாள். அந்த யெளவனப் புருஷன் பூஞ்சோலை யம்மாள் என்ன ஜோலியாக வந்திருக்கிறாளோ வென்பதை உணரவேண்டுமென்ற பேராவல் கொண்டவனாய் அந்த அறைக் குள் நுழைந்து கதவிற்கப்பால் கிடந்த ஒரு நாற்காலியில் உட்