பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

செளந்தர கோகிலம்



கார்ந்தவண்ணம், கூடத்தில் நடந்த சம்பாஷணை முழுவதையும் சிறிதும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தான். பூஞ்சோலை யம்மாள் வெள்ளித் தட்டுகளில் விலையுயர்ந்த பொருட்களை வைத்துக் கொணர்ந்து கொடுத்ததையும் தங்களை விருந்திற்கு வரும்படி அழைத்ததையும் உணர்ந்து ஆநந்தபரவசமடைந்தான். அவர்களது பங்களாவிற்குப் போய் அவர்களோடு பேசிப் பழகும்படியான சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கப் போகிறதா என்று அவன் கொண்டிருந்த ஏக்கம் முற்றிலும் கரை கடந்த மகிழ்ச்சியாக மாறியது. பூஞ்சோலையம்மாள், தான் கோடீசு வரனது பெண்சாதி என்பதைப் பாராட்டாமல், பரம ஏழை யாகிய தங்களிடத்தில் வந்து நிரம்பவும் பணிந்து நயந்து பேசியதைக் காண அவன் மிகுந்த வியப்பும் களிப்புமடைந்தான். ஆனால் தனது தாய் பூஞ்சோலையம்மாளிடத்தில் அற்பத்தன மாக நடந்துகொள்ளாமல் கம்பீரமாகவும், பெருந்தன்மையாக நடந்துகொண்டது அவனுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருந்தது. கடைசியில் கோகிலாம்பாளும், தன்னைப் போலவே, இரவு முழுதும் தேக அசெளக்கியத்தினால், துன்புற்றிருந்தார் களென்ற செய்தியைக் கேட்க, அவனது மனம் பதறியதானாலும் தான் அவள் மீது விரகவேதனை கொண்டு தவித்தது போல, ஒருகால், அவளும் தன்னைக் கண்டு மோகித்திருப்பாளோ என்ற சந்தேகமும் அவனது மனதில் தோன்றித் தோன்றிப் பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உண்டாக்கியது; முதல்நாள் மாலையில் தொடங்கி அதுகாறும் அவனது மனதையும் உடம்பையும் வதைத்துப் புண்படுத்திய வேதனைக ளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போயின. அவனது உடம்பில் அப்போது எவ்வித அவஸ்தையும் இருப்பதாகத் தோன்றவில்லை. தான் அன்றைய தினம் ரஜாவுக்கு எழுதி ஒர் ஆளிடத்தில் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, அவர்களது பங்களாவிற்குப் போவதே முடிவென அவன் தீர்மானித்துக் கொண்டான். அன்றைய தினம் எப்படியும் அவர்களது ஜாகைக் குத் தான் போய் மறுபடியும் கோகிலாம்பாளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் ஆவலுமே அப்போது அவனை வதைத்துக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் உள்ளே வந்த தனது தாயைக் கண்ட கண்ணபிரான், தனது மன நிலைமையை