பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 73

வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டு ஒன்றையும் அறியாத பரம சாதுவைப்போலத் தனது நெற்றியில் கையை வைத்துக் குனிந்தவண்ணம் உட்கார்ந்திருந்தான். அப்படி இருந்த வன் உடனே நிமிர்ந்து, “என்ன அம்மா! என்ன சொல்லுகிறார் கள்? நான் அவர்களிடத்தில் ஏதோ அயோக்கியத்தனமாக நடந்திருக்கிறேனென்று ஆரம்பத்தில் நீங்கள் சந்தேகப் பட்டீர்களே! அவர்கள் என்மேல் என்ன குற்றம் சுமத்துகி றார்கள்?' என்று புன்னகையோடு கேட்டான்.

நற்குணமும் நல்லொழுக்கமும் நிறைந்த தனது புத்திரனது நடத்தையைக் குறித்துத் தான் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது தவறென உணர்ந்து வருந்திய கற்பகவல்லியம்மாள் மிகுந்த கிலே சமடைந்து மெதுவான குரலில் அன்பாகப் பேசத் தொடங்கி, 'இல்லை தம்பி கோபித்துக் கொள்ளாதே; இவர்கள் தக்க பெரிய மனிதர்கள். இவர்களிடத்திலெல்லாம் நாம் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். நீ அறியாத குழந்தையல்லவா, ஏதாவது தவறான காரியத்தைச் செய்திருப்பாயோ என்று கவலைப்பட்டு நான் அந்தச் சந்தேகத்தைக் கொண்டேன். அதிருக்கட்டும், இவர் கள் சொன்னவையெல்லாம் நீ கேட்டுக் கொண்டிருந்தாயா? வெள்ளித் தட்டுகளில் பிரமாதமான சாமான்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்! இன்றைய தினம் நமக்காக இவர்களுடைய பங்களாவில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்; அதற்காக நம்மை வருந்தி அழைக்கி றார்கள். உனக்கு உடம்பு அசெளக்கியமாக இருக்கிறதென்று சொல்லிப் பார்த்தேன். இவர்களுடைய மூத்த பெண்ணுக்கும் இரவெல்லாம் உடம்பு தொந்தரவாம். அதைக்கூட லட்சியம் பண்ணாமல், அந்தக் குழந்தை இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்திருக்கிறதாம். இவர்கள் வற்புறுத்தி அழைக்கிறார்கள். உன்னைக் கேட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். இவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள்.

அதைக் கேட்ட கண்ணபிரான் எவ்வித மறுமொழியையும் சொல்லமாட்டாமல் சிறிது நேரம் தயங்கியிருந்தபின் தனது தாயைப் பார்த்துச் செல்லமாகக் கொஞ்சிப் பேசத் தொடங்கி, “எனக்கென்ன தெரியும்? நீங்களே சொல்லுங்களேன்? அவ்வளவு