பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

செளந்தர கோகிலம்



காரர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் தாராளமாக மனசு இருக்கிறதில்லை. இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; என்னவோ நம்முடைய அதிர்ஷ்ட பாக்கியந்தான் இவர்களுடைய சிநேகம் நமக்குக் கிடைத்தி ருக்கிறது!’ என்றான்.

கற்பகவல்லியம்மாளும் மிகுந்த களிப்பும் ஆநந்தமும் அடைந்தவளாய், "இந்த அம்மாள் நல்ல தங்கமான குணமுடைய வர்களென்று அநேகர் சொல்ல நான் கேள்வியுற்றிருந்தேன். அது சரியாகவே இருக்கிறது. ஈசுவரன் அவரவர்களுடைய யோக்கிய தைக்குத் தகுந்தபடிதான் சம்பத்தை அளித்திருக்கிறான். நான் எத்தனையோ பெரிய மனிதர் வீட்டுப் பெண் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். அநேகமாய் எல்லோரும் பணத்திமிரும், அகம்பாவமும், முன்கோபமும், அட்டகாசமும், டம்பமும் மற்றவர்களெல்லாரையும் விடத் தாமே பெரிய மேதாவிக ளென்ற கருவமும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த அம் மாளுடைய பணிவான நடத்தையும், அடக்கமான வார்த்தையும், ஸ்ரஸமான குணமும், தாராளமான மனமும் யாருக்காகிலும் இருக்குமா என்பதே சந்தேகம். நீ சொல்லுகிறபடி நமக்கு ஏதோ பெருத்த நன்மையைக் கருதியே ஈசுவரன் இந்த அபாயத்தைக் காட்டி இப்படிப்பட்ட உத்தமமான மனிதர்களுடைய சிநே கத்தை நமக்குச் செய்து வைத்திருக்கிறாரென்றே நினைக்க வேண்டி இருக்கிறது. கடவுள் நேராக வந்து உதவி செய்ய முடி யுமா? மனிதர் மூலமாகத்தான் செய்ய வேண்டும். இவர்கள் எல்லாச் செல்வமும் சம்பூரணமாக வாய்க்கப் பெற்றிருப் பவர்கள். இவர்கள் நம்மிடத்தில் இவ்வளவு அபிமானமும், வாஞ்சையும் வைக்க வேண்டுமென்றால், அதற்கு இப்படிப்பட்ட அபாய சமயத்தில் நம்முடைய உதவியை அவர்கள் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தாலன்றி வேறு விதத்தில் இவர்களுடைய மனசில் அப்படிபட்ட எண்ணங்களும் உணர்ச்சி களும் உண்டாக்க முடியாதல்ல்வா எல்லாம் ஈசன் செயலென்றே நான் உறுதியாக நம்புகிறேன்" என்றாள்.

அதைக்கேட்ட கண்ணபிரான், நீங்கள் சொல்வது உண்மைதான். இதற்கு முன் ஒருவரையொருவர் கண்டறியாத