பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 77

மனிதர்களுக்குள் பழக்கமும், நட்புமுண்டாக வேண்டுமானால், அதற்கு ஏதாவது ஒர் ஆஸ்பதமிருக்க வேண்டுமல்லவா! அதற்காகத்தான் இப்படிப்பட்ட எதிர்பாராத விபத்துக்களும் சந்திப்புகளும் நேருகின்றன. நீங்கள் இந்த அம்மாளைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்களே! இவர்களுடைய இரண்டு பெண் களையும் பார்த்தால், ஆகா! நீங்கள் எவ்வளவு ஆனந்தம் அடைவீர்கள் தெரியுமா அவர்கள் இரண்டு பேரும் வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரி, ஒரே அச்சில் வார்த்த தங்கப் பதுமைகள் போல எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் தெரியுமா! இரண்டுபேருடைய குணத்தழகையும், நாணம், அடக்கம், பதவிசு முதலிய குணங்களையும் பார்த்தால் நிரம்பவும் சந் தோஷப்படுவீர்கள். மூத்த பெண்ணின் புத்திசாலித்தனமும், சமர்த்தும், பெரும்போக்கும் அடடா என்னவென்று சொல்லு வேன்! நாம் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து, பார்த்தால் பார்த்த மனிதரையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உலகத்தில் எப்படிப்பட்ட அபாரமான சிருஷ்டிகளும், தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களும் இருக்கிறார்கள் தெரியுமா எல்லாம் அங்கேயே போய்ப் பழகப் பழகத்தான் தெரிகிறது” என்றான்.

கற்பகவல்லியம்மாள், 'நீ சொல்லுகிறது. வாஸ்தவமான சங்கதிதான். இருந்தாலும் அடுப்பைக் கட்டி ஓயாமல் அழுது கொண்டே இருக்கும் எங்களைப் போன்ற பெண்பிள்ளைகள் வீட்டை விட்டுப் போகவும், இப்படிப்பட்ட அருமையான மனிதர்களைப் பார்க்கவும் சரிப்படுகிறதா? எல்லாம் உங்களைப் போன்ற ஆண்பிள்ளைகளுக்குத்தான் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கிறது; அவர்களுடைய தரிசனமும், சிநேகமும் உங்கள் மூலமாகத்தான் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். நீ அந்தப் பெண்களுடைய குணாதிசயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னதைக் கேட்க, அவர்களை எப்போது பார்ப்போமென்ற ஒர் ஆவல் என் மனசில் பொங்கி எழுந்து வருத்துகின்றது. எல்லா வற்றிற்கும் நீ முதலில் கொஞ்சம் காப்பி சாப்பிட்டுவிட்டு ரஜாக் கடிதத்தை எழுது; நான் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொள்ளுகிறேன். நேரமாகி விட்டது; அவர்களுடைய வண்டி வருவதற்குள் நாம் சித்தமாக இருக்க வேண்டும்” என்று கூறிய வண்ணம், வெள்ளித்தட்டுகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு