பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

செளந்தர கோகிலம்



போய் உள்ளே வைத்துவிட்டுத் தனது அலுவல்களைக் கவனிக்கலானாள்.

கண்ணபிரானது அப்போதைய மனநிலைமை எப்படி இருந்திருக்குமென்பதை யூகித்துக் கொள்வது சுலபமேயன்றி விவரித்துச் சொல்வது நிரம்பவும் கடினமான காரியம். அவனது மனம் பொங்கிப் பூரித்து ஆனந்த நிருத்தனம் செய்து, எப்போது பத்து மணி அடிக்குமென்றும், தன் மனதைக் கொள்ளையிட்ட காமரூபிணியான அந்த ரதி தேவியை எப்போது மறுபடியும் காணப்போகிறோம் என்று எண்ணி எண்ணிப் பேராவ்ல் கொண்டும் துடிதுடித்து நின்றது. அழகும், இனிமையும் வடிவெ டுத்ததோவென இருந்த கோகிலாம்பாளை நினைக்குந்தோறும், அவனது உள்ளமும், உடம்பும் நெக்கு நெக்குருகிப் பேரின்பம் சுரந்து, மயிர்க்காலுக்கு மயிர்க்கால் தேவாமிருதம் பொங்கி அவனை ஆநந்தச் சாகரத்திலாழ்த்தியது. பசி, தாகம், சோர்வு முதலிய எந்தவித தேகபாதையும் அவன் உணராமல், ஈசுவரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் யோகிகள் மெய்ம்மறந்து தங்களது ஐம்புலன்களையும் அறிவையும் பரப்பிரமத்திலேயே லயிக்க விட்டு ஆநந்தமயமாக உட்கார்ந்திருப்பதுபோல, கோகிலாம் பாள், கோகிலாம்பாள் என்று ஜெபம் செய்து தவத் தியான மாக உட்கார்ந்திருந்தான். அவன் தனது தாயின் வற்புறுத்த வினால் தூண்டப்பட்டவனாய்க் காப்பியை அருந்துவது பிரம்மப் பிரயத்தனமாக முடிந்து விட்டது. அதன் பிறகு ஆபீசுக்கு அவன் ரஜாக் கடிதமெழுதிய போது ஒருவரியில் ஒன்பது பிழைகள் செய்து காகிதங்களைப் பலதடவை கிழித்தெறிந்து புதிது புதிதாக எழுத நேர்ந்தது. கற்பகவல்லியம்மாளது மனமும் மிகுந்த சலனத்திற்குள்பட்டு இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித வேதனையடைந்திருந்தமையால், அவள் செய்த காரியங்களிலும் அநேக தவறுகளும் திருத்தங்களும் ஏற்பட்டன. அவ்வாறு தாயும் பிள்ளையும் தங்களது நிம்மதியான மன நிலைமையை இழந்து தத்தளித்துத் தடுமாறிப் பிறவிக்குருடன் பார்வை பெற்றது போன்ற குதூகலமும் மனவெழுச்சியுமடைந்து தங்களது காரியங்களையெல்லாம் விரைவில் முடித்துத் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு விருந்திற்கு புறப்பட ஆயத்தமாயினர்.