பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 79

மணி சரியாக ஒன்பதே முக்கால் ஆயிற்று, வாசலில் தடதட வென்று பெட்டி வண்டியொன்று வந்து நின்றது. டாலி டவாலி களனிந்த இரண்டு போயிகள் வண்டியை விட்டிறங்கி வந்து மெதுவாகத் கதவைத் தட்டி, "ஐயா! ஐயா!' என்று குரல் கொடுத்தனர். அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள், “அதோ வண்டி வந்து விட்டது' என்றாள். கண்ணபிரான் துள்ளிக் குதித் தெழுந்து ஒட்டமாக ஒடி வாசற்கதவை திறக்க,வெளியில் நின்ற போயிகள் குனிந்து கைகுவித்து வணங்கி, 'வண்டி வந்திருக் கிறது. எஜமான் அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்கள்' என்று பணிவாகக் கூற, "இதோ வருகிறோம். வண்டியைத் திருப்பி நிறுத்துங்கள்' என்று கூறிவிட்டு, விரைவாக உள்ளே ஒடி வந்தான். உடனே வண்டி திருப்பி நிறுத்தப்பட்டது. அடுத்த நிமிஷத்தில் அம்மாளும் பிள்ளையும் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். கற்பகவல்லியம்மாள் வாசற்கதவை மூடிப் பூட்டிக் கொள்ள, உடனே இருவரும் போய் வண்டியில் உட்கார்ந்து கொண்டார்கள். வண்டி புறப்பட்டது.

அந்த வண்டி கோகிலாம்பாளது பங்களாவிற்குப் போய்ச் சேரக் கால் நாழிகை நேரம் பிடித்தது. அந்த வண்டியில் பூட்டப் பட்டிருந்த குதிரை இரண்டாயிரம் ரூபாய் விலையுள்ள உன்னத மான ஆஸ்திரேலியா தேசத்துக் குதிரையானாலும், கண்ண பிரானது மனோ வேகத்திற்கிணையாக, அது ஒடமாட்டாததா யிருந்தது. வண்டியும், குதிரையும் கோகிலாம்பாளினது மாளிகையை நோக்கிப் புறப்படுவதற்கு முன்னமே அவனது மனம் அந்த மாளிகைக்குள் போய்ச் சேர்ந்து அந்த வடிவழகி எந்த விடுதிக்குள் வீற்றிருப்பாளாவென்றும், எப்படிப்பட்ட ஆடையாபரணங்களை அணிந்து எவ்வித அலங்காரத்திலிருப்பா ளோவென்றும் நினைத்துத் தத்தளித்துத் தவித்துத் தேடியலைந்து கொண்டிருக்கிறது. அவனது மனம் முற்றிலும் ஆவலும், இன்பமுமே நிரம்பியதாய் சஞ்சல வடிவமாயிருந்தது. கற்பக வல்லியம்மாளது மனநிலைமையும் கிட்டத்தட்ட அதுபோலவே இருந்தது. ஆனால் புதல்வனது மனதில் காதலின் தீயும், பிரேமை யின் பித்தமும் எழுந்து பெருகி வதைத்துக் கொண்டிருந்தன. கற்பகவல்லியம்மாளது மனதிலோ தமக்கு ஒரு கோடீசுவரனது நட்பும் அன்னியோன்னியமான பழக்கமும் ஏற்படுவது பற்றி