பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

செளந்தர கோகிலம்



மகிழ்ச்சியும், மனவெழுச்சியும் சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண் டிருந்தன. ஆனால் மகா உன்னத பதவியில் இருப்பவர்களான அவர்களுக்கும் பரம ஏழைகளாக இருக்கும் தங்களுக்கும் கலியான சம்பந்தம் ஏற்படக்கூடுமென்பதை அந்த அம்மாள் கன விலும் எண்ணவில்லை. ஆதலால், கண்ணபிரானுக்கு ஏற்பட்டது போல அவ்வளவு அமிதமான மனநெகிழ்வும் மோகலாகிரியும் அவளுக்கு உண்டாகவில்லை.

அவ்வாறு சலனம் அடைந்து பூரித்த நிலைமையில் அவர்கள் இருவரும் அந்த வனமாளிகையை அடைந்தனர். அவர்கள் அந்த உன்னத மாளிகையின் வெளி வாசலில் நுழைந்தது முதல் உட்புற கட்டிடங்களை அடைந்ததற்குள், அங்கே காணப்பட்ட அழகழகான பொருட்களையும், அந்த உத்யானவனத்தின் எழிலையும் கண்டு அதி வியப்பும் ஆநந்தமும் அடைந்து தங்க ளது மனதை அத்தகைய நூதன வஸ்துக்களில் லயிக்க விடுத்துச் சென்றனர். பிறப்பு முதல் கேவலம் ஒரு குடிசையிலிருந்த மனிதன் உலகத்தையே மயக்கும் விநோதங்களும், மந்திர நிர் மாணங்களும் நிறைந்த ஜெகன்மோகினி தேவியின் கொலு மண்டபத்தில் கொண்டு போய் திடீரென்று விடப்பட்டால் எண்ணிறந்த புதுமைகளை ஒரே காலத்தில் காண்பதால், அவனது மனம் எப்படிப்பட்ட பிராந்தியையும் பெரு வியப்பையும் பேரின்பத்தையும் அடையுமோ அப்படிப்பட்ட நிலைமையி லேயே அவர்களது மனம் இருந்தது.

அந்தச் சிங்காரப் பூங்காவினிடையில் அமைக்கப்பட்டிருந்த மாடமாளிகையின் முன் வாசலில் பெட்டி வண்டி போய் நின்றது. அவ்விடத்தில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த தாதிகள் இருவர் உடனே ஓடிவந்து வண்டியின் கதவைத் திறந்து, 'வாருங்கள் வாருங்கள்” என்று மிகுந்த அன்போடு உபசரித்து அழைக்க, தங்களுக்குக் காட்டப்படும் அளவு கடந்த மரியாதை யையும், உபசாரத்தையும் கண்ட கண்ணபிரானும் கற்பகவல்லி யம்மாளும் பூரித்து, புளங்காகிதம் அடைந்தவர்களாய் வண்டியை விட்டுக் கீழே இறங்கினார்கள். உடனே தாதிகள் வணக்கமாக அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு படிகளில் ஏறி முன்புறத் தாழ்வாரத்தின் வழியாக நடந்து இரண்டு மூன்று கூடங்களைக் கடந்து உள்ளே செல்ல, அங்கே ஆயத்தமாக நின்று