பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செளந்தர கோகிலம் அபிப்பிராயம் முதலியவைகளுக்குக் கொஞ்சமாவது குறைவு ஏற்படும் என்றாவது தாங்கள் நினைத்துக் கவலையே கொள்ள வேண்டாம். இன்றைய தினம் நேர்ந்த விஷயங்கள் எல்லாம் ஈசுவரனுடைய சோதனையே தவிர வேறல்ல என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இப்படிப்பட்ட இழிவான காரியங்களை யெல்லாம் நீங்கள் செய்யக் கூடியவர்களல்ல என்பதும் எங்களு டைய உறுதியான எண்ணம். முன்காலத்தில் சந்திரமதிக்கு நேர்ந்த மகா பயங்கரமான பழியைவிட இது ஒரு பெரிய தீமையா? தன்னுடைய நாடு நகரங்களையும், ராஜ்யத்தையும், சுகபோகங்களையும், சம்பத்தையும், பெருமையையும், இழந்து புருஷனைவிட்டுப் பிரிந்து, குழந்தையை நாகப்பாம்புக்கும் இரை கொடுத்து, அதைக் கொளுத்த ஒரு முழத்துண்டுக்கும், ஒரு பிடி வாய்க்கரிசிக்கும் வகை இல்லாமல் தத்தளித்து நள்ளிரவில் சுடுகாட்டிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து போகையில் காசிராஜனது குழந்தையைக் கொன்று விட்டாள் என்ற அடாப்பழி வந்து லபித்ததே! அப்படிப்பட்ட பேரிடியையும், அபாண்டமான பழியையும்விட அதிகமாக இனி இந்த உலகத்தில் யாருக்காவது துன்பங்கள் நேரப் போகின்றனவா? சந்திரமதியோ ஒரு மகா சக்கரவர்த்தியின் பட்ட மகவி. நாமெல் லாம் எந்த மூலை? உலகத்தார் நம்மைப்பற்றி எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும். மனசுக்கு மனசே சாட்சி என்று, நாம் திரிகரண சுத்தியாக எவ்விதத் தவறையும் செய்யாது இருக் கையில், நமக்குப் பிறரிடத்திலும் பயமில்லை; கவலைப்பட வாவது லஜ்ஜைப்படவாவது நியாயமும் இல்லை. வருவது வரட்டும் என்று நினைத்து மனதின் தைரியத்தை விடாமல் நம்மாலான முயற்சிகளை நாம் செய்வதே உசிதமான காரியம். உங்களுக்கும் எங்களுக்கும் ஏற்பட இருந்த சொந்தம் ஏற்பட்ட மாதிரியே, இனி நாங்கள் பின்வாங்கப் போகிறதில்லை. எது எப்படியானாலும் இந்தக் கலியாணம் என்றைக்கும் முடிந்தே தீரும். தங்களுடைய குமாரரே என்னுடைய பர்த்தாவென்று நான் எப்போது எண்ணினேனோ அந்த எண்ணம் இனி என்னு டைய உயிர் இருக்கிற வரையில் மாறப்போகிறதில்லை. ஒரு வரை ஒரு பெண் புருஷராக எண்ணிவிட்டால், அவருக்கு நியாயமாகவோ அநியாயமாகவோ ஏற்படும் நன்மை தீமைகளை