பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் iO1 திறமைசாலி என்றுதான் எண்ணிக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றே பிறருக்குத் துன்பம் இழைத்து, அவர்கள் துக்கித்து அழும்படி செய்து, அதைக் கண்டு சந்தோஷமடைகிற ஸ்திரீகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் படும் துயரத்தைக் கண்டும் அல்லது கேட்டும் மனம் இளகாமல் அசட்டையாக இருக்கும் ஸ்திரீகளும் உலகத்தில் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் நீ பிறருடைய முகவாட்டத்தைக் கண்டு இரக்கங்கொண்டு, உன்னாலான உதவியை அவர்களுக்குச் செய்ய வேண்டுமென்று துடிதுடித்து நிற்பதாய்ச் சொல்லுகி றாயே! அந்த விதத்திலும் நீ மகா சிலாக்கியமான மனுஷிதான். ஆகையால், உன்னை நீயே இளக்காரப்படுத்திப் பேசியது உன்னிடம் அபாரமான பெருமைகள் இருப்பதையே காட்டியது. அது இருக்கட்டும்; இவர்கள் விசாரப்படுவதைப் பார்த்தால், இதுவரையில் நல்ல யோக்கியமான மனிதராக இருந்த ஒருவருக்கு ஏதாவது திடீரென்று கெடுதல் நேர்ந்திருக்க வேண்டும். அல்லது, அவர் எதிர்பாராத விதமாய்க் கெடுதலில் இறங்கி இருக்க வேண்டும். இவர்கள் பயந்து ரகசியமாய் பேசுவதைப் பார்த்தால், பெரிய அதிகாரி, அல்லது, ஊரிலுள்ள பெரிய மனிதர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், தாம் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால், அவர் தங்களுக்கும் ஏதாவது துன்பம் செய்வாரோ என்று பயப்படுவதாகவும் எண்ணவேண்டி இருக்கிறது. அதுவுமன்றி, இவர்களுடைய உடம்பு பதறுகிறதைப் பார்த்தால், இன்று நேர்ந்த கெடுதல், அப்படிப்பட்ட அதிகாரியோ, அல்லது பெரிய மனிதரோ எவ்வித நியாயமுமின்றி அக்கிரமமாக அதைச் செய்திருக்க வேண்டும் என்றும், அதைக் கண்டு அப்படிப்பட்ட துஷ்டரைக் கண்டிக்க தமக்குச் சக்தி இல்லையே என்று நினைத்து எல்லோரும் இப்படி அசக்தராய்ப் பதறுகின்றனர் என்றும் நாம் யூகிக்க வேண்டி யிருக்கிறது” என்றார். அதைக் கேட்ட பெண்மணி பெரிதும் வியப்படைந்து, 'பலே! பலே! எதெதையோ கொண்டு என்னென்னவோ முக்கியமான விஷயங்களையெல்லாம் வெகு சுலபத்தில் கண்டுபிடித்து விட்டீர்களே! இருக்கட்டும், நான்போய் இவர்களோடு பேசி, விஷயம் இன்ன தென்பதைத் தெரிந்து கொண்டு வரட்டுமா?’ என்றாள்.