பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் iO5 களால் எங்கள் துன்பம் விலகப் போகிறதா இதுவரையில் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாழுந்தெய்வம் இனிமேலா கண்ணைத் திறந்து பார்க்கப் போகிறது! ஐயோ! கோவில்களிலுள்ள தெய்வங்கள் எல்லாம் வெறுங்கல்களாய் நிற்கின்றனவோ இந்த உலகத்தில் தெய்வமே இல்லாமல் போய் விட்டதே! ஐயோ! என்னுடைய உயிர்போகவும் மாட்டாமல் இருக்கவும் மாட்டாமல் கிடந்து துடித்து வீண்பாடுபடுகிறதே! ஐயோ! அம்மா! நான் இனி என்ன செய்வேன்!” என்று கன்ன கடுரமாக நெடுங்குரல் பாய்ச்சி ஒலமிட்டு அலறி நமது திவானின் மனையாட்டியை இறுகிக் கட்டிப்பிடிக்க, அந்தப் பரம வங்கடமான காட்சியைக் கண்டு நெருப்புக் குவியலின் மேல் வீழ்ந்த புழுவைப் போலத் துடித்துக் கண்ணிர் விடுத்து நமது திவானின் மனையாட்டி முன்னிலும் பன்மடங்கு அதிக ஹறிதமாகவும் உருக்கமாகவும் அவளை நோக்கி, 'அம்மா! வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்; எங்களால் ஏதாவது அநுகூலம் ஆகுமானால், அதை நாங்கள் உடனே செய்கிறோம். இந்தப் போலீஸ் ஜெவான்களுடனும் நாங்கள் பேசி, அவர்களால் ஏதாவது நன்மை செய்ய இயலுமானால் அதையும் செய்யச் சொல்லுகிறோம். நீ கூசாமல் சொல்” என்று வாஞ்சையோடு வற்புறுத்திக் கூறினாள். உடனே அந்த யெளவன ஸ்திரீ சிறிது தெளிவடைந்து, 'அம்மா என் வயிற்றெரிச்சலை நான் என்னவென்று சொல்லப் போகிறேன். உலகத்தில் மற்றப்பெண்களுக்குப் புருஷன் இறந்த பிறகு விதவைத் தனம் உண்டாகும். எனக்கு என் புருஷர் ராஜாவைப் போல் இருக்கும்போதே விதவை நிலைமையை விடப் பதினாயிரம் மடங்கு அதிக துக்ககரமான நிலைமை உண்டாகிவிட்டதம்மா! நாங்கள் கள்ளர் ஜாதியில் பிறந்தவர்கள். ஆனாலும், எங்களுடைய முன்னோர்கள் திருட்டு புரட்டு முதலிய கெட்ட காரியங்களில் இறங்காமல் நிலத்தை உழுது பயிர்ச்செலவு செய்து மானமாகவும் கண்ணியமாகவும் நாணய மாகவும் ஜீவனம் செய்து வந்தவர்கள். என் தாய் தகப்பன்மாருக்கு என்னைத் தவிர வேறே குழந்தைகள் பிறக்கவில்லை. நான் என்னுடைய பதினான்காவது வயதில் பெரிய மனுஷியானேன். அப்போது எங்களுக்குச் சுமார்