பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 OG செளந்தர கோகிலம் பதினாயிரம் ரூபாய் பெறுமானமுடைய ஆஸ்தியிருந்தது. என் தகப்பனார் எங்களுக்குச் சமதையான ஒரு தக்க குடும்பத்தில் நல்ல குணவானான ஒருவரைத் தேடிப்பிடித்து அவருக்கு என்னைக் கட்டிக்கொடுத்தார். அவர்களும் இந்த ஊரில் இருப்பவர்களே. என்னைத் தவிர இந்த ஊரில் என் பாட்டனார் காலத்திலேயே பங்கு பிரித்துக் கொண்டு வேறாகப் போய் இருக்கும் என் சிற்றப்பனுக்கும், பெரியப்பனுக்கும் ஆண் பெண் மக்களும் இருக்கிறார்கள். என் பெரியப்பனுடைய பிள்ளை ஒருவருக்கும் என் புருஷருக்கும் கொஞ்ச காலமாக அதிக சிநேகம் ஏற்பட்டுப் போயிருந்தது. ஆகையால், அவர்கள் எப்போதும் ஒருவரோடொருவர் இணைபிரியாமலே இருந்து சிரித்து விளையாடிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். என்னுடைய கலியாணம் என் புருஷர் வீட்டிலேதான் நடந்தது. அப்போதும், என் பெரியப்பன் பிள்ளை என் புருஷருக்குப் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல இருந்து சடங்குகளை நடத்திவைத்தார். கலியாணம் முடிவடைந்தவுடன், உலகத்தின் முறைமைப்படி, மறுவுண்ணலுக்காக நானும், என் புருஷரும் என்னுடைய பிறந்த வீட்டிற்கு வந்தோம். அப்போது காலை 9-மணி சமயமிருக்கலாம். எங்கள் தாய் தகப்பன்மார் மேளதாளத்துடன் ஊர்வலமாக எங்களை அழைத்துக் கொண்டுபோய் வீட்டு வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி தோஷம் கழித்து, சிதறு தேங்காய் உடைத்து எங்களை வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போய் ஊஞ்சலில் உட்கார வைத்து இன்னம் செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அப்போது அங்கே வந்து கூடியிருந்த ஜனங்கள் எல்லோருக்கும் கற்கண்டு வாழைப்பழம் சந்தனம் வெற்றிலை பாக்கு முதலியவை வழங்கப்பட்டன. அந்தச் சமயத்தில் அவ் விடத்தில் தாம்பூலம் வாங்கிக்கொண்டவர்கள், வாங்கிக்கொள்ளா தவர் ஆகிய சிலர் ஏதோ சங்கதியைத் தெரிந்து கொண்டு சரேலென்று ஒருவர் பின் ஒருவராய் எழுந்து வெளியில் போயினர். அதைக் கண்ட என் தகப்பானர் அதன் காரணம் என்னவென்று விசாரித்தார். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள என் பெரிய தகப்பனாருடைய வீட்டில் யாரோ சில போலீஸ்காரர்கள் வந்து சோதனை போட்டுக் கொண்டிருப்ப