பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 செளங்கா கோகிலம் சக்திக்குத் தகுந்தபடி கஞ்சியையோ கூழையோ அவருக்கு வார்த்து உபசரித்ததன்றி, அவரை அழைத்துக் கொண்டு எங்கள் குல தெய்வமாகிய ஐயனாரப்பன் கோவிலுக்குப்போய் மாவிளக்குப் போட்டுத் தேங்காய் உடைத்து அர்ச்சனை பண்ணி, பிரார்த்தனை செலுத்தி சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அவருக்கும் எனக்கும் விவாகம் ஆனது முதல், உலகாசாரப்படி நடத்த வேண்டிய சடங்கு நடத்தப்படாமல் இருந்தமையால், அதை உடனே நடத்திடவேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். மற்றவர்களைப்போல் நாங்கள் ஊரார் அறிய அதை நடத்த முடியவில்லை. ஆகையால் நாங்ளே அதற்கு ஒரு வெள்ளிக்கிழமையைக் குறிப்பிட்டுக் கொண்டோம். என்னிடமிருந்த பணத்தில் அவருக்கு இரண்டு வராகனில் பட்டுக்கரை வேஷ்டி ஒரு ஜோடியும், ஐந்து ரூபாயில் எனக்கு ஒரு சேலையும், இன்னும் பட்டுப்பாய் தலையணை முதலியவைகளும் நான் வாங்கிக் கொண்டு வந்தேன். அன்றைய தினம் சாப்பாட்டையும் விசேஷமாகத் தயார்செய்து அவருக்குத் திருப்தியாகப் போட்டேன். அன்றைய பகல் பொழுது கழிந்து, அந்தி வேளை வந்தது. நான் விளக்குக்குக் குங்குமப் பொட்டு இட்டு அதைக் கொளுத்தி வைத்துவிட்டு அவருக்குச் சாப்பாடு போட்டு நானும் சாப்பிட்டேன். பிறகு அவரைப் பட்டுப்பாயில் உட்காரவைத்து நானும் பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு போலீஸ் ஜெவான் கொஞ்ச தூரத்தில் நின்றபடி என் புருஷருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, அவரைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே அவசரமாக அழைத்துக் கொண்டு வரச்சொல்லுகிறார் என்றான். அதைக் கேட்டவுடனே எங்களுக்கு அடிவயிற்றில் ஒரு கூடை நெருப்புத்தணலைக் கொட்டியதுபோல இருந்தது. எங்களுடைய சந்தோஷமெல்லாம் இருந்த இடம் தெரியாதபடி ஒடி ஒளிந்துகொண்டது. பெருத்த திகிலும் இன்னதென்று சொல்லமுடியாத ஒருவிதக் குழப்பமும் எங்கள் மனசில் உண்டாய்விட்டன. நாங்கள் நல்ல வேளை பார்த்து இருவரும் சந்தோஷமாக உட்கார்ந்து பேச ஆரம்பிக்கையிலேயே, போலீஸ் காரன் வந்து கூப்பிட்டது அபசகுனமாகவும் அச்சானியம்