பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் j 13 போலவுமிருந்தது. என் புருஷர் கள்ளச் சாதியில் பிறந்த மனிதராக இருந்தாலும் இரண்டு தடவை அக்கிரமமாக தண்டனை அடைந்தவராதலால், அவருடைய இயற்கையான மனோதிடம் போய்விட்டதன்றி, அவர் போலீசார் என்றாலே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தார். அந்த நிலைமையில் அந்தப் போலீஸ் ஜெவான் திடீரென்று வந்து கூப்பிடவே, அவர் ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டவர்போல நடுநடுங்கி திருடனைப்போல் விழிக்கத் தொடங்கினார். எங்களுக்கு மறுபடியும் ஏதோ கெடுதல் நேரப்போகிறதென்றே அப்போது என் மனசில் யாரோ சொல்லுவதுபோல ஒரு தோற்றம் உண்டாயிற்று. உடனே நான் துணிந்து அந்த ஜெவானைப் பார்த்து, 'ஐயா! என்னுடைய புருஷரை நான் சிறைச் சாலையிலிருந்து நேராக இங்கே அழைத்து வந்தேன். அதுமுதல் இவர் இந்த இடத்தைவிட்டுப் போகாமல் இவ்விடத்திலேயே இருந்துவருகிறார். இவரை மறுபடி நீங்கள் எந்தப் படுகுழியில் தள்ள எண்ணி இருக்கிறீர்களோ தெரியவில்லையே! என்ன காரணமாக இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார்? அதைச் சொல்லும்’ என்றேன். அந்த ஜெவான் 'விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. கையோடு இவரை அழைத்துக் கொண்டு வரும்படி இன்ஸ். பெக்டர் என்னை அனுப்பினார்' என்றான். அதைக் கேட்ட நான், 'ஐயா! இன்றைய தினம் நாங்கள் விசேஷ நாள் கொண்டாடுகிறோம். அதுவும் இப்போது இரவு காலம்; என்ன பேச வேண்டுமானாலும், நாளைய தினம் காலையில் வந்து பேசிக் கொள்ளுங்கள். பொழுது விடிகிறதற்குள் எதுவுடம் முழுகிப் போய்விடாது. இவர் பேயல்ல, பூதமல்ல, கொள்ளைக் காரரல்ல; ஒரு ராத்திரிக்குள் ஊரையெல்லாம் விழுங்கிவிட மாட்டார்’ என்றேன். உடனே ஜெவான், அவர் பெரிய இன்ஸ்பெக்டர். அவரிடம் இப்படியெல்லாம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது கெடுதலாக முடியும். இவரை அவர் அதிக நேரம் காக்க வைக்க மாட்டார்; இரண்டொரு பேச்சில் அனுப்பிவிடுவார். நான் திரும்பிப் போய் இவர் வரவில்லை என்று அவரிடம் சொன்னால், அவர் கோபித்துக்கொண்டு, இவருக்கு விலங்கு போட்டுப் பிடித்து இழுத்துக்கொண்டு வரச் சொல்லுவார். அது உங்களுக்கு இஷ்டமானால் சொல்லுங்கள். செ.கோ.:1-8