பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 t S செளந்தர கோகிலம் என்று பலவாறு பிரலாபித்து அழுது புலம்பிக் கொண்டே நான் அந்த ஸ்டேஷனுக்கு எதிரில் நடுப்பாதையிலேயே படுத்திருந்து இரவைப் போக்கினேன். இது நேற்றைய தினம் நடந்தது. இன்றைய தினம் இந்த வழக்கு நியாயாதிபதி அதை உண்மை என்று நம்பி இதற்குமுன் இரண்டு தடவை என் புருஷர் தண்டனை அடைந்ததைக் கருதி, அவருக்குப் பத்து வருஷத் திற்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்துவிட்டார். அவரைத் திருவனந்தபுரம் பெரிய சிறைச்சாலையில் அடைப்பதற்காக ஜெவான்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். மேல் நியாய ஸ்தலத்தில் அப்பில் செய்து கொள்வதற்கு ஏராளமாகப் பணம் வேண்டுமாம். என் புருஷர் இந்தப் பத்து வருஷ காலத்தையும் கடத்திவிட்டு மறுபடியும் வரப்போகிறாரா அவருடைய முகத்தை நான் இனி பார்க்கப் போகிறேனா பாழுந்தெய்வம் எங்கள் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டதே! எங்கள் வீட்டு விளக்கை அணைத்து, என்னைக் கன்னி கழியாமல் அடிக்கிற அந்த இன்ஸ்பெக்டருடைய தலையில் இன்னமும் இடி விழாமல் இருக்கிறதே! இவன் ஏழேழு தலைமுறைக்கும் வயிறெரிந்து திண்டாடித் தவிக்க வேண்டும். இத்தனைக்கும் வாயையே திறக்காமல் என் புருஷர் தலையைக் குனிந்து கொண்டு போகிறாரே! அந்தப் பொறுமையொன்றே இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழிந்து நாசமாய்ப் போகச் செய்துவிடப்போகிறது பாருங்கள். இந்த சமஸ்தானத்தில் யாரோ தெற்கத்தி முதலியார் ஒருவர் திவானாக வந்திருக்கிறாராம். அவருடைய சொந்த தேசத்திலிருந்து யாரோ பல முதலியார் களை அந்த திவான் கொண்டு வந்து வேலையில் வைத்திருக் கிறாராம். இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவர்களுள் ஒருவனாம். இவன் வந்தபோது சாதாரண ஜெவானாக வந்தானாம். இங்கே வந்து, பொய் வழக்கு ஜோடித்து நல்ல கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கி இப்போது இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்திருக்கிறானாம். நீங்கள் என் புருஷரைப் பற்றி அந்த திவானிடம் சிபாரிசு செய்தால்கூட அவர் எங்கள் விஷயத்தில் இரக்கங்கொள்ளமாட்டார்; தங்களுடைய சொந்த ஊர் மனிதரிடத்திலேயே தாrண்யம் பாராட்டுவார். இனி எங்களுக்குத் தெய்வ சகாயத்தினால் நல்ல காலம் பிறந்தால்