பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i8 செளந்தர கோகிலம் அந்த வரலாற்றைக் கேட்ட, மிருதுவான தன்மையையுடைய தமது மனையாட்டின் மனம் விஸ்னத்தைத் தாங்கமாட்டாது உட்கார்ந்து போய்விட்டதைப் பற்றிய பெருங் கவலையும் அவரை மிகுந்த சஞ்சலத்திற்குள்ளாக்கியது. தாமே அந்த சமஸ்தானத்தின் திவான் என்பதை அப்போது தாம் வெளியிடுவது உசிதமல்லவென்று முடிவு செய்துகொண்ட முதலியார் தமது மனையாட்டியை வண்டியில் உட்கார வைத்த உடன், முன்னே குறிக்கப்பட்ட யெளவன ஸ்திரீயின் முன்னர் போய் நின்று, 'அம்மா இந்தப் போலீசார் உன்னுடைய புருஷரைத் திருவனந்தபுரம் சிறைச்சாலைக்குத்தான் கொண்டு போவார்கள். நீ அவ்வளவு தூரம் நடந்துவர உன்னால் சாத்தியப்படாது. நீ வந்து எங்களுடைய மோட்டார் வண்டியில் என் சம்சாரத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள். நாங்கள் இன்னம் கொஞ்ச நேரத்தில் உன்னை அந்த ஊரில் கொண்டு போய்விட்டு உன்னுடைய வரலாற்றை திவானிடம் தெரிவிக் கிறோம். அவர் உடனே இதைப்பற்றி விசாரித்து, நீ சொல்லுகிற வரலாறு நிஜமானதாய் இருந்தால், உன் புருஷரை விடுவிக்க உத்தரவு செய்வார். நீ அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேரலாம்” என்று அன்பு ததும்பிய குரலில் கூறினார். விரம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த யெளவன ஸ்திரீ திவான் கூறிய சொற்களைக் கேட்டு, எதிர்பாராத அத்தகைய அதிர்ஷ்டம் தங்களுக்கும் நேருமா என்ற மலைப்பும் வியப்பும் அடைந்து, அவர் கூறியது மெய்யோ பொய்யோ என்பதை நிச்சயிக்கமாட்டாதவளாய்ச் சிறிதுநேரம் தயங்கி மெளனமாக நின்றாள். அவளுக்குப் பக்கத்திலிருந்த ஜனங்கள் எல்லோரும் திவானது சொற்களைக் கேட்டு மிகுந்த களிப்பும் பிரமிப்பும் அடைந்து, "வீரம்மா இந்த ஐயா சொல்கிறது போலச் செய். இந்த ஐயாவும் அம்மாளும் பார்வதி பரமசிவன் போலவே இருக்கிறார்கள். உங்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும். கவலைப்படாதே; நீ போய் வண்டியில் உட்கார்ந்து கொள். இவர்கள் உன்னை நல்ல வழியில் விடுவார்கள்; போய், அம்மாளுக்குப் பக்கத்தில் குந்திக்கொள்” என்று வற்புறுத்திக் கூறினர். அதைக் கேட்ட வீரம்மாள் ஆறுதலும் சந்தோஷமும் அடைந்தவளாய்ச் சென்று மோட்டார் வண்டியில் ஏறி திவான்