பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள். ராமா பககார்" 121 கலவரமடைந்து வந்திருந்தார். ஆகையால், திவானினது முகத்தோற்றத்தை அறிந்துகொள்ளுகிற வகையில் இன்ஸ்பெக் டரது உடம்பில் பிராணனே இல்லையென்று கூறவேண்டும். திவானினது முகம் சந்தோஷமும் புன்னகையும் தோற்றுவித்த தைக் காணவே, இன்ஸ்பெக்டருடைய உயிர் திரும்பியது. அவரது மனது துணிவும் உற்சாகமும் கொண்டது. தமக்கு ஏதோ நன்மை செய்யக்கருதியே திவான் தம்மை வரவழைத்திருக்கிறார் என்று இன்ஸ்பெக்டர் நிச்சயித்துக்கொண்டு குனிந்து அவருக்குக் கூழைக் கும்பிடு போட்ட வண்ணம் நின்றார். - உடனே திவான், 'ஐயா! இன்ஸ்பெக்டரே! இப்படி வந்து நாற்காலியில் உட்காரும்” என்று அன்போடும் நயமாகவும் கூறி உபசரித்தார். அதற்குமுன் எந்த திவானும் எந்த இன்ஸ்பெக்டருக் கும் காட்டியிராத அவ்வளவு பெரிய மரியாதை தமக்குக் காட்டப்படுவதைக் கண்ட இன்ஸ்பெக்டர் ஆநந்த பரவச மடைந்து பூரித்துப் போய்ச் சிறிது தயங்கி நின்றார். அதைக் கண்ட திவான், 'ஐயா ஏன் யோசிக்கிறீர்? வந்து உட்கார்ந்து கொள்ளும். நீரும் தஞ்சாவூர் மனிதன் நீரும் முதலியார் நானும் முதலியார் நாம் நமது குடும்பப் பூர்வோத்திரங்களை விசாரிக்கப் போனால், ஒருவருக்கொருவர் தூரபந்துவாகக்கூட இருப்போம். நான் வெளியில் வரும்போது உத்தியோக தோரணையேயன்றி, என் வீட்டிற்குள் அதையெல்லாம் நான் வகித்துக்கொள்வது இல்லை. இங்கே நான் எல்லோரோடும் சிநேக பாவமாகத்தான் இருப்பது வழக்கம். பரவாயில்லை, வந்து உட்காரும்” என்று பட்சமாகக் கூறி உபசரிக்க, உடனே இன்ஸ்பெக்டர் நிரம்பவும் களிப்படைந்து அருகில் நெருங்கி வந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டார். உடனே திவான், 'ஐயா! முதலியாரே! நான் உம்மை ஒரு முக்கியமான காரியார்த்தமாக வரவழைத்தேன். இப்போது இந்த சமஸ்தானம் முழுதிற்கும் ஒரே ஒரு போலீஸ் சூப்பரின் டென்டெண்டு இருப்பது உமக்குத் தெரிந்த விஷயம். இதை இரண்டு பிரிவாகப் பிரித்து இன்னொரு புதிய சூப்பரின் டென்டெண்டை வைக்கவேண்டுமென்று ஒரு யோசனை இருந்து வருகிறது. அதற்கு மகாராஜனுடைய அநுமதி கிடைத்துவிடு