பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 4.25 இன்ஸ்பெக்டர் : (புன்னகையோடு) ஆம். ஆடுகளைத் திருடினவன் வேறே ஒருத்தன். அவன் ஆடுகளை விற்றுப் பணத்தை எல்லாம் செலவுக்கு வைத்துக் கொண்டு ஊரைவிட்டு சிங்கப்பூருக்கு ஒடிப்போய்விட்டான். அவனுக்குப் பதிலாக இந்தக் கள்ளப் பையனைப் பிடித்துத் தண்டனை செய்து வைத்தேன். திவான் : இரண்டு ஆடுகளைத் திருடிய குற்றத்திற்காக அவனுக்குப் பத்து வருஷ தண்டனை கொடுக்கவேண்டிய காரணமென்ன? இன்ஸ்பெக்டர் : அவன் இதற்குமுன் இரண்டு தடவை களில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முதலில் ஒரு வருஷ தண்டனையும், பிறகு ஏழு வருஷ தண்டனையும் அடைந்தான். ஆகையால் அவனைப் பிடித்துத் தண்டனை செய்து வைத்தால்தான், முதல் வகுப்பு இன்ஸ்பெக்டர் வேலை கேட்கலாமென்று நினைத்து நான் அவனைக் குற்றவாளியாக்கி தண்டனை செய்துவைத்தேன். திவான் : ஒகோ! அப்படியா? நீர் செய்தது நிரம்பவும் உசிதமான காரியமே. இதற்குமுன் அந்தக் கள்ளப் பையனுக்கு தண்டனை செய்து வைத்ததாகச் சொல்லுகிறீரே. அந்த வழக்குகளிலும், உண்மையில் அவன் குற்றம் செய்யவில்லையே? இன்ஸ்பெக்டர் : செய்யவில்லை. திவான் : அவனுக்கு இதற்குமுன் நீர் செய்துவைத்த இரண்டு தண்டனைகளுக்காகவும் உமக்கு ஏதாவது உத்தியோக உயர்வு கிடைத்ததா? - இன்ஸ்பெக்டர் : ஆம் கிடைத்தது. முதலில் அவனுக்கு ஒரு வருஷ தண்டனை செய்து வைத்தவுடன், அதற்காக மேல் அதிகாரிகள் என்னை மெச்சி, எனக்கு முதல்வகுப்பு ஏட்டு வேலை கொடுத்தார்கள். பிறகு நான் அவனுக்கு ஏழு வருஷ தண்டனை செய்த வைத்தவுடன், எனக்கு இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கிடைத்தது. - திவான் : (வேடிக்கையாகச் சிரித்து) ஒகோ பேஷ்! பலே! அந்த ஒரே கள்ளப் பையன் உமக்கு ஏட்டு வேலை,