பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 செளந்தர கோகிலம் இன்ஸ்பெக்டர் வேலை எல்லாம் செய்து வைத்தது போதாமல், இப்போது சூபரின்டென்டெண்டு வேலையும் செய்து வைக்கப் போகிறான்; ஏன் அப்படிச் சொல்லுகிறது, செய்து வைத்து விட்டான் என்றே நீர் நினைத்துக் கொள்ளலாம். அந்த ஒரே மனிதனால், உமக்கு இந்த மாதிரி உத்தியோகம் மளமளவென்று உயர்ந்ததிலிருந்து, அவனை அதிர்ஷ்டசாலியென்று சொல்லுவதா, உம்மை அதிர்ஷ்டசாலி என்று சொல்லுவதா என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இருந்தாலும் நீர் அசகாய சூரர் என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சம்கூட சம்பந்தப்பபடாத ஒரு மனிதன் மேல் ஒன்றன்பின் ஒன்றாகப் பல குற்றங்களைச் சுமத்துவதென்றால், அது மற்றவரால் சுலபமாகச் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படிச் செய்ய எப்பேர்ப்பட்டவருடைய மனமும் கொஞ்சம் பின்வாங்கும். நீங்கள் எதற்கும் பின்வாங்காத மகா திடமான மனசை உடையவர். போலீஸ் இலாகாவுக்கு உம்மைப் போன்ற மனிதர்கள்தான் சரியானவர்கள் அதிருக்கட்டும், இந்த மூன்று வழக்குகளிலும் இந்தக் கள்ளப் பையன் சம்பந்தப்படவே இல்லையென்று சொன்னரே. அவைகளுக்கு வேண்டிய சாட்சிளுக்கு என்ன செய்தீர்? இன்ஸ்பெக்டர் : சாட்சிகளுக்குத்தானா பஞ்சம் ? பட்டிக்காடுகளில் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்றால் சிம்ம சொப்பனமல்லவா. எங்களுக்கு நடக்கும் செல்வாக்கு ஒரு மகா ராஜாவுக்குக் கூட அங்கே நடக்காது. நாங்கள் சாதாரணமாய் எந்த மனிதனோடும் பேசுகிறதில்லை. எவனையாவது நாங்கள் கூப்பிட்டு ஸ்டேஷனுக்குள் கொண்டு போய் வைத்துக்கொண்டு சிநேகபாவமாய்ப் பேசிவிட்டால், அதுவே போதும். அவன் உடனே தனக்கு நிகர் யாருமில்லையென்றும், தனக்கு ஒரு பதவி வந்துவிட்டதாகவும் நினைத்துக் கொள்வதோடு, நாங்கள் எதைச் செய்யச் சொன்னாலும் செய்ய உடனே இணங்கிவிடுகிறான். எங்களோடு சிநேகமாயிருந்தால் தனக்கும் நல்ல செல்வாக்கு ஏற்படுமென்று நினைத்துக்கொண்டு நாங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவன் வருவான். பொய்ச் சாட்சிக்கு ஆள்கள் வேண்டுமானால், ஒரு நிமிஷத்தில் ஆயிரம் பேரானாலும் கிடைத்து விடுவார்கள் என்றார்.