பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 129 திவான். (வியப்படைந்து) "ஒகோ! நீர் இவ்விதமான சங்கதியெதையும் என்னிடம் சொல்லவே இல்லையா? சரி: அப்படியே இருக்கட்டும். நீர் இவ்விதமான சங்கதியெதையும் என்னிடம் சொல்லவில்லையென்று இந்தக் காகிதத்தின் அடியில் உம்முடைய கையாலேயே எழுதிக் கையெழுத்துச் செய்யும்’ என்றார். உடனே இன்ஸ்பெக்டர் தாம் நிரம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணி விசையாக நடந்து போய் நீதிபதியிடத்திலிருந்த காகிதத்தின் அடியில் திவான் சொல்லியபடி எழுதிக் கையெழுத்துச் செய்துவிட்டு முன்னிருந்த இடத்திற்குச் சென்றார். - அதன் பிறகு திவான் மற்றவர்களை நோக்கி, “சரி; இனி இதன் கீழ் நீங்கள் நால்வரும் கையெழுத்துச் செய்யலாம், என்னுடைய வேண்டுகோளின்படி நீங்கள் நால்வரும் இங்கே வந்து பக்கத்து அறையில் இருந்ததாகவும், இந்த இன்ஸ்பெக்ட ரும் நானும் மேலே விவரிக்கப்பட்டபடி சம்பாஷித்ததை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், பிறகு என்னால் உள்ளே அழைக்கப்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் தாம் இவ்வித தகவல் எதையும் சொல்லவில்லையென்று மறுத்துவிட்டதாகவும் எழுதி நீங்கள் நால்வரும் கையெழுத்துச் செய்யுங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே எழுதிக் கையெழுத்துச் செய்து அந்தக் காகிதத்தை திவானிடம் கொடுத்தனர். அதை வாங்கி அதன் பின்புறத்தில் திவான் சிறிது நேரம் ஏதோ எழுதிக் கொண்டிருந்தபின் நிமிர்ந்து இன்ஸ்பெக்டரை நோக்கி, 'ஐயா இன்ஸ்பெக்டரே! நான் இந்த சமஸ்தானத்து மகா ராஜனுடைய பிரதிநிதியென்பது உமக்குத் தெரிந்த விஷயம். நான் எல்லா நியாயஸ்தலங்களுக்கும் கடைசியான நீதிபதியென்பதையும், எந்த நியாயாதிபதியின் தீர்மானத்தையும் தக்க ஆதாரத்தின் மேலோ, அல்லது, மகாராஜனது தயாளத்தைக் கருதியோ மாற்றவும், ரத்து செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டென்பதையும் நான் உமக்கு எடுத்துக்காட்டுவது அவசிய மென்று நினைக்கிறேன். நீர் என்னோடு பேசிய விஷயங்களை யெல்லாம் தக்க மனிதர்களான இவர்கள் நால்வரும் செ.கோ.:1-9