பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 11 மலையாகக் குவித்து வைத்திருந்த விருந்துப் பொருள்களை எல்லாம் ஜனங்கள் சாப்பிட்டார்களோ என்னவோ ஒன்றும் தெரியவில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத் தது; எல்லோரும் சந்தோஷப்படும்படி விருந்து செய்ய நினைத் ததற்கு, எல்லோருக்கும் உபவாசமும் துயரமும் அவமானமுமே ஏற்பட்டன. என்ன செய்கிறது? எல்லாம் கால பலன்’ என்றாள். அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாளும் மிகுந்த சஞ்சலம் அடைந்தவளாய்ப் பேசத்தொடங்கி, 'ஆம்; என்ன செய்கிறது? அரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்தது என்பார்கள். அதுபோல எங்களுடைய துரதிர்ஷ்டத்தில் மற்ற எல்லாருக்கும் பங்கு கிடைத்தது. எனக்கு இப்போது சாப் பாட்டிலேயே மனம் செல்லவில்லை. பேசாமல் நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருந்தால், அதுவே போதுமானது. ஆனால் நான் ஆகாரம் வேண்டியதில்லை என்று சொன்னாலும், நீங்கள் என்னை விடப்போகிறதில்லை. ஆகையால் சொற்பமாக ஏதாவது ஆகாரம் இவ்விடத்துக்கே அனுப்பி விடுங்கள். இங்கேயே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்ளுகிறேன்,' என்று கூறினாள். - அதைக் கேட்ட உடனே கோகிலாம்பாள் தானே நேரில் சென்று ஆகாரம் எடுத்து வந்து தனது மாமியாருக்குப் போஜனம் செய்விப்பதாகக் கூறி, புஷ்பாவதியை அழைத்துக் கொண்டு போய் உண்பிக்கும்படி தனது தாய்க்குச் சொல்ல, பூஞ்சோலை யம்மாள் அந்த ஏற்பாட்டிற்கு இணங்கினாள். உடனே அவர்கள் இருவரும், கற்பகவல்லியம்மாளை அவ்விடத்திலே இருக்க வைத்துவிட்டு, புஷ்பாவதியை அழைத்துக் கொண்டு அப்பால் போயினர். பங்களாவில் பணிமக்கள் மாத்திரம் இருந்ததையும், விருந்தினர் எல்லோரும் போய்விட்டதையும் கோகிலாம்பாளும் பூஞ்சோலையம்மாளும் அப்போது கண்டு கரைகடந்த துயரமும், சஞ்சலமும் அடைந்தவர்களாய்ச் சிறிது நேரம் வருந்தி இருந்த பின்னர், புஷ்பாவதிக்கு உபசார வார்த்தைகள் கூறி அவளுக்கு இலை போட்டு பரிமாறும்படி உத்தரவு செய்ய, பரிசாரகர் அப்ப டியே செய்தனர். புஷ்பாவதி, பூஞ்சோலையம்மாளும் உட் கார்ந்தால் அன்றித் தான் மாத்திரம் உட்கார்ந்து போஜனம் செய்