பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 133 உங்களுக்கு எந்த ஊரிர் இருக்க விருப்பமோ அங்கே போய் செளக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள். ஜனங்கள் யாரும் உங்களைப்பற்றி இழிவாகவே பேசமாட்டார்கள். இனியும் உங்களுக்கு எவரேனும் தீங்கு செய்ய நினைத்தால், நீங்கள் எந்த நேரத்திலும் என்னிடம் வந்து முறையிட்டுக் கொள்ளலாம். நீங்கள் என்னுடைய ஜாகையில் சில தினங்கள் இருந்து விருந்துண்டுவிட்டு உங்களுக்குப் பிரியமான இடத்திற்குப் போய்ச்சேருங்கள்' என்று மிகுந்த அன்போடு கூறி முடித்தார். அதைக் கேட்ட கண்ணுசாமியும் வீரம்மாளும் முன்னிலும் பன்மடங்கு அதிகமாய்ப் பொங்கியெழுந்து தங்களது நன்றி விசுவாசத்தின் பெருக்கை வெளிப்படுத்தி மறுபடி கீழே விழுந்து அவரை நமஸ்கரித்து விடை பெற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றனர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகர்களால் சிறைச்சாலைக்கு நடத்தப் பட்டார். நீதிபதி முதலியோரும் திவானிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றனர். . . . . உடனே திவான் முதலியார் தமக்கெதிரில் வைக்கப் பட்டிருந்த இராஜாங்க சம்பந்தமான காகிதக் கட்டுகளில் தாம் அவசரமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருக்கின்றனவாவென்று பார்த்தார்; அவசரமான விஷயங்களாயிருந்தால், அதற்கு அறிகுறியாக காகிதக்கட்டு சிவப்பு நாடாவினால் கட்டப்பட்டிருப்பது வழக்கம். அவ்வாறு சிவப்பு நாடாவினால் கட்டப்பட்டிருந்த காகிதக்கட்டுகள் அவருக்கெதிரில் நான்கு இருந்தன. திவான் முதலியார் அவற்றுள் ஒன்றையெடுத்துக் கட்டை அவிழ்த்துக் காகிதங்களைப் படித்து, விஷயம் இன்னதென்பதை உணர்ந்து கொண்டே போய், அதன்மேல் தமது முடிவான உத்தரவை எழுதி மறுபடி அதைக் கட்டி அப்பால் வைத்தார். அப்போது வெளியில் இருந்த பாராக்காரர்களுள் ஒருவன், “எஜமானே! தபால்காரன் சில கடிதங்கள் கொண்டு வந்திருக்கிறான்' என்று நிரம்பவும் பணிவாகவும் வணக்கமாகவும் மரியாதையாகவும் வெளியில் நின்றபடியே கூறினான். அதைக் கேட்ட திவான், தபாற் காரனை உள்ளே அனுப்பு” என்றார்.