பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i34 செளந்தர கோகிலம் அடுத்த நிமிஷம் தபாற்காரன் ஒருவன் உள்ளே வந்து குனிந்து அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு, சுமார் பதினைந்து காகிதங்களை எடுத்து திவானுக்கெதிரில் மேஜையின்மேல் வணக்கமாக வைத்துவிட்டு, மறுபடி அவருக்கு இன்னொரு கும்பிடு போட்டுவிட்டு வெளியிற் போய்விட்டான். திவான் முதலியார் புதிய கடிதங்களையெல்லாம் எடுத்துத் தள்ளித் தள்ளிப் பார்த்தார். சர்கார் கடிதங்கள் சிலவும் சொந்தக் கடிதங்கள் சிலவும் இருந்தன. ஆனால் அவர் எதையும் படிக்க வில்லை. சிவப்பு நாடாவினால் கட்டப்பட்ட அவசரக் கட்டுகள் மூன்றையும் தாம் முதலில் பார்த்து உத்தரவுகள் பிறப்பித்து அனுப்பிய பிறகு புதுக்கடிதங்களை நிதானமாய்ப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அவசரக் கட்டுகளுள் இன்னொன்றை எடுத்து நாடாவை அவிழ்த்திக் காகிதங்களைப் படித்துக் கொண்டே போகத் தொடங்கினார். அப்போது அவருக்குப் பின்புறத்திலிருந்த ஒரு கண்ணாடிக்கதவு மெதுவாய்த் திறந்துகொண்டது. அதனால் ஏற்பட்ட ஒசை அற்ப ஒசை யாகவே இருந்தது. ஆனாலும், நிரம்பவும் கூர்மையான புத்தியும் கவனமும் அமிதமான சுறுசுறுப்பும் உடையவரான திவான் அந்த ஒசையை உணர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்து சரேலென்று பின் புறத்தில் திரும்பிப் பார்த்தார். அமிர்தத்தையும், இனிமையான குளிர்ச்சியையும் அள்ளிச் சொரியும் பூர்ண சந்திரபிம்பம் தோன்றுவதுபோலப் புன்னகை பூத்த முகத்தோடும், அன்னத்தைப் பழித்த நடையோடும் அவ்விடத்திலிருந்து தம்மை நோக்கி வந்த தமது மனையாட்டியான காந்தியம்மாளைக் காணவே, திவான் முதலியாரது தேகமும் மனதும் அவருடைய முயற்சியின்றி தாமாகவே இன்பமயமாய் நிறைந்து மலர்ந்து இளகி ஜ்வலிக்கத் தொடங்கின. அத்தகைய ஒப்புயர்வற்ற மா மதியைக்கண்ட அவரது வசீகர வதனமாகிய இனிய புஷ்பம் சந்தோஷத்தினால் தானாகவே மலர்ந்து இன்பமாகிய கிரணங்களை நாலா பக்கங்களிலும் வீச ஆரம்பித்தது. தாம் அவசரமான காகிதக்கட்டுகளைப் படித்துப் பரிசீலனை செய்து உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கையில், அதற்கு இடைஞ்சலாகத் தமது மனையாட்டி வந்துவிட்டாளேயென்ற ஒருவித ஆயாசமும், சஞ்சலமும் அவரது மனத்தில் தோன்றி