பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 செளந்தர கோகிலம் பணிவாகக் குனிந்து நின்றபடி, முல்லையரும்பின் வரிசைகள் போலக் கண்கொள்ள அழகாய் விளங்கிய தனது சுந்தரப் பல் வரிசைகளில் சிறிதளவு வெளியில் தெரியும்படி நயமாகப் புன்னகை செய்தவளாய் அவரை நோக்கி நிரம்பவும் பணிவாகவும் மிருதுவாகவும் பேசத் தொடங்கி, "மணி ஒன்பது ஆகிறதே. வழக்கம்போலத் தாங்கள் வருவீர்களென்று சமயற் காரர்கள் இந்தப் பலகாரங்களை எட்டு மணிக்கே செய்து வைத்துவிட்டார்கள். நான் இதுவரையில் பார்த்தேன்; அதிக நேரம் வைத்திருந்தால் இவைகளின் சூடு ஆறிப் போகுமென்று, இவ்விடத்திலேயே கொடுத்துவிட்டுப் போகலாமென்று நினைத்து எடுத்துக்கொண்டு வந்தேன். தங்களுடைய சந்தர்ப்பத்தை அறிந்துகொள்ளாமல் நான் இப்படி திடீரென்று வருவது தங்களுடைய வேலைக்கு இடஞ்சலாயிருக்குமோ என்ற பயமும், தாங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்ற எண்ணம் என்னைத் தள்ளிக் கொண்டு வந்துவிட்டது. ஆசை வெட்கமறியாது அல்லவா. ஆகையால் துணிந்து வந்துவிட்டேன். இவ்விடத்து சந்தர்ப்பம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை' என்று வீணாகாணம் செய்வது போன்ற அதிமாதுரியமான மெல்லிய குரலில் கூறினாள். உடனே, திவான் வாஞ்சையாக அந்த இன்ப வல்லியை நோக்கிப் புன்னகை செய்து, 'காந்திமதீ! இவ்வளவு நேரமாகியும், நான் சாப்பிடாமல் வெறும் வயிறோடு இருக்கிறேனே என்று நினைத்துக் கரிசனத்தோடு நீ இவைகளைக் கொண்டு வந்திருக்கிறாய். அதற்குப் பதிலாக உன்மேல் நான் கோபித்துக் கொள்வதென்றால், அதைக் கேவலம் மிருகத் தன்மை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை வருஷ காலமாய் நாம் இருவரும் ஒன்றாக இருந்து பழகி இருக்கி றோமே. என்றைக்காவது நான் உன்மேல் காரணமாகவும் அநாவசியமாகவும் கோபித்துக் கொண்டதுண்டா? அப்படி இருக்க, நீ ஏன் இன்றைய தினம் இவ்விதமான பயம் கொள்ள வேண்டும். நான் இத்தனை வருஷ காலமாய் உன்னோடு பழகிப் பார்த்த வரையில் நீ அற்ப விஷயத்திலும் தவறாக நடந்ததை நான் ஒரு நாளும் காணவே இல்லை. ஆகவே, இன்று நீ உண்மையிலேயே தவறாக நடந்திருந்தாலும், அது என்னுடைய நன்மையைக் கருதிச் செய்யப்பட்டனவேயன்றி வேறல்ல.