பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் #37 அதைத் தவறு என்று சொல்வது சரியல்ல. அதை மிதமிஞ்சிய பிரியம் என்று சொல்லவேண்டுமேயன்றி தவறு என்று சொல்வது பிசகு. இருக்கட்டும். நீ இரண்டு கைகளிலும் பெருத்த பளுவை வைத்துக் கொண்டு நிற்கிறாய். செம்பையும் தாம்பாளத்தையும் இப்படி மேஜையின்மேல் வைத்துவிட்டு நீ கொஞ்ச நேரம் அந்த ஸோபாவின்மேல் உட்கார்ந்துகொள். நான் அவசரமான காகிதங்கள் சிலவற்றைப் படித்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறேன். இன்னம் அரை நாழிகை சாவகாசத்தில், இந்த வேலை முடிந்துபோகும். உடனே பலகார வேலையை ஆரம்பித்துக் கொள்ளலாம். இப்போது தபாலில் வந்த காகிதங் கள் வேறே இருக்கின்றன. அவைகளைக் கடைசியாக வைத்துக் கொள்ளுகிறேன்' என்று அன்பாகவும் குதுரகலமாகவும் கூறினார். அதைக்கேட்ட பெண்மணி, தாங்கள் வேலை பார்க்கும் போது நான் சும்மாவா இருக்கிறது. நானும் ஒரு வேலை செய்கிறேனே. நான் தங்களுடைய பக்கத்தில் நின்று இந்தப் பலகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துத் தங்களுடைய வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறேன். அதனால் தங்களுடைய மற்ற வேலைக்குக் கெடுதல் இல்லாமல் நான் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுகிறேன். இரண்டு வேலைகளும் ஒரே காலத்தில் நடக்கட்டுமே” என்று நிரம்பவும் மிருதுவாகவும் நயமாகவும் பணிவாகவும் கூறினாள். அதைக் கேட்ட திவான் மிகுந்த களிப்பும் பூரிப்பும் அடைந்து, “சரி; அப்படியானால், உன் சித்தமே எனக்குச் சட்டம். நீ வாயைத் திறக்கச் சொன்னால் திறக்கிறேன்; மூடச்சொன்னால் மூடிக்கொள்ளுகிறேன். ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் பயமாக இருக்கிறது. நான் சாப்பிடும் பலகாரத்தின் ருசியில், மறந்தாற் போல, ஹல்வா முதல் தரமாய் இருக்கிறதென்று இந்த அவசர உத்தரவுகளில் எழுதிவிடப் போகிறேனே என்ற பயம் உண்டாகிறது. இருந்தாலும், பரவாயில்லை. உன் இஷ்டப் படியே நான் செய்கிறேன். இந்த சமஸ்தானத்தில் மற்ற எல்லா நியாயஸ்தலங்களையும்விட, என்னுடைய நியாயஸ்தலம் மேலானது. என் உத்தரவுக்கு மேல் அப்பில் கிடையாது. அதற்கெல்லாம் மேலானது உன்னுடைய உத்தரவு” என்று