பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் 139 உனக்கு நாச்சியார் பாடியுள்ள பாட்டு இந்தச் சமயத்தில் நினைவிற்கு வந்ததுபோலிருக்கிறது. நீ உபயோகித்த இரண்டொரு வார்த்தைகளிலிருந்தே அந்தப் பாட்டு நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். நாச்சியார் எந்த இடத்தில் யாரைக் குறித்து அப்படிச் சொன்னார்? அந்தப் பாட்டைச் சொல் கேட்கலாம்” என்றார். அதைக் கேட்ட மாதரசி மிகுந்த கிலேசமும் நாணமும் அடைந்து நாணிக்கோணி, "நாச்சியார் தெய்வீகமாய்ப் பிறந்த பெண். அவர் இயற்கையிலேயே பகவத் பக்தியுடையவராயும், வரகவியாயும் இருந்தார். அவர் நரமனிதர் எவருக்கும் வாழ்க்கைப்பட விரும்பாமல், "மற்றொருவர்க்கு என்னைப் பேசவொட்டேன் மாலிருஞ்சோலை மாயற்கல்லால்' என்று சொல்லி, தான் பூரீமந் நாராணயனுக்கு வாழ்க்கைப்பட உறுதி செய்துகொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தாம் புருஷராக அடைய எண்ணிய பரமாத்மாவை நினைத்து திருப்பாவை என்று முப்பது பாட்டுகள் பாடி இருக்கிறார் அதில் ஒரு பாட்டின் கருத்தைத்தான் நான் சொன்னேன். 'சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச்சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய், பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வானன்றுகாண், கோவிந்தா! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.” என்பதுதான் அந்தப் பாசுரம். பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக் கும் உள்ள சம்பந்தமும் இந்தப் பாசுரத்தில் வெகு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முதன்முதலில் நான் இந்தப் பாடலைப் படித்த காலத்தில், இதில் சொல்லப்பட்டிருப்பது போலத்தான் நான் தங்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அதுபோலவே நடந்து வருகிறேன்” என்றாள். திவான் முதலியார், 'பேஷ்! பாட்டு வெகு நன்றாக இருக்கிறது. ஸ்திரீகள் இப்படிப்பட்ட அரிய கருத்துகள் அடங்கிய பாட்டுகளைப் படித்து, இவற்றின் கருத்துகளின்படி