பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 செளந்தர கோகிலம் வதில்லை என்று கூற, அந்த அம்மாளும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். உடனே கோகிலாம்பாள் நல்ல உயர்ந்தவகைப் பதார்த்தங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு போய்த் தனது மாமியாரான கற்பகவல்லியம்மாளைப் பணி வாகவும், அன்பாகவும் உபசரித்து உண்பித்தபின் நிம்மதியாகப் படுத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அந்த அம்மாளிடத்தில் அநுமதி பெற்றுக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்தாள். அதற்குள் புஷ்பாவதி தனது போஜனத்தை முடித்துக்கொண்டாள். பூஞ்சோலையம்மாள் புஷ்பாவதியின் மனம் கோணாமல் இருப் பதற்காகத் தானும் போஜனம் செய்ததாக ஒருவாறு நடித்து சொற்பகமாக ஆகாரம் பார்த்துக்கொண்டாள். அவர்கள் இரு வரும் கோகிலாம்பாளை வற்புறுத்த, அவளும் இலையண்டை உட்கார்ந்து எழுந்தாள். - அவர்கள் மூவரும் அன்றைய பகல் முழுதும் பட்டினி கிடந்து நிரம்பவும் பாடுபட்டு அலுத்திருந்தமையால் அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போய்த் தனித்தனியாக மூன்று விடுதிக ளில் இருந்த தத்தம் படுக்கைகளை அடைந்து சயனித்துக் கொண்டனர். பூஞ்சோலையம்மாள் அன்றைய தினம் நிகழ்ந்த மகா பயங்கரமான சம்பவங்களைப்பற்றி நினைத்து நினைத்து இரவு மூன்று மணி வரையில் தூக்கம் பிடியாமல் புரண்டிருந்து கடைசி யில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டள். கோகிலாம்பாளோ அன்றையதினம் நிகழ்ந்த மகா பயங்கரமான சம்பவங்களை நினைத்தும் கண்ணபிரானை நினைத்தும் உருகிக் கரைந்து அழுது, தனது சயனம் முழுதும் கண்ணர் ஆறாயப் பெருகும்படி செய்து, அளவிட இயலாத சஞ்சலக் கடலில் ஆழ்ந்து அந்த இரவு முழுதும் இமைகளையே மூடாமல் படுத்துப் புரண்டு புழுங்கித் துவண்டு வாடித் தளர்ந்து துயரமே வடிவாகக் கிடந்தாள். மகா உத்தமகுண ஸ்திரீகளான பூஞ்சோலையம்மாள் கோகி லாம்பாள் முதலியோரது நிலைமை இவ்வாறு இருக்க, போஜனம் முடித்துக் கொண்ட பிறகு சயனத்தில் படுத்த புஷ்பாவதி, நித்திரை செய்பவள் போலக் கால் நாழிகை நேரம் வரையில் பாசாங்கு செய்தாள். மற்ற இருவரும் தத்தம்